ஹஜ் 2013 பயணம் பாஸ்போர்ட் சிறப்பு முகாம்


  hajj 2013

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்காக, மார்ச், 2ம் தேதி, பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடக்கிறது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், இந்த ஆண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்காக, சாலிகிராமம், டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் உள்ள, பாஸ்போர்ட் உதவி மையத்தில், மார்ச், 2ம் தேதி, காலை, 9:30 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, பாஸ்போர்ட் சிறப்பு முகாமை நடத்துகிறது. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அலுவலகத்தில், உரிய ஆவணங்களுடன் புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்துள்ளோர், இம்முகாமில் பங்கேற்கலாம்.