கவி ஹோட்டலில் தீ விபத்து


கோட்டக்குப்பத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஓட்டல் கறிக்கடை எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Photo0365

Photo0366

கோட்டக்குப்பம் கோயில்மேடு பகுதியில் ஷேக்தாவூத் (70) என்பவருக்கு சொந்தமான இடத்தில் முகமதுசரீப் ஓட்டல் நடத்தி வருகிறார். தார் சீட் போடப்பட்டு உள்ள ஓட்டலில் டீ, டிபன், மதியம், இரவு உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓட்டலில் இருந்து புகை மூட்டம் வந்தது. சமையல் அறையில் வேலை நடப்பதாக சாலையில் சென்றவர்கள் கருதினர். ஆனால் சிறிது நேரத்தில் தீ மளமளவென கூரையில் பற்றியதால் அருகில் முகமதிஅலி என்பவரின் ஆட்டு இறைச்சி கடையும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் வானூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். புதுவையில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.

 

 

தீ விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில், அரிசி மூட்டை, பேன், நாற்காலி உள்ளிட்ட மரப்பொருட்கள், ஓட்டல் உபகரணங்கள், துணிகள், எலக்ட்ரிக் பொருட்கள் என ரு.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.கறிக்கடை தீப்பிடித்ததில் எடை மிஷின், ஐஸ் பெட்டி, ஆட்டு கறிகள், அறையில் இருந்த பொருட்கள், எலக்ட்ரிக் பொருட்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

Advertisements