விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு


 

உங்களை பெயரை சரி பார்க்க இங்கே அழுத்தவும் 

 

 

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில்  நடந்தது. ஆட்சியர் சம்பத் வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி பெற்றுக்கொண்டார். ஆட்சியர் அலுவலக மேலாளர் சேதராமன், தேர்தல் பிரிவு தாசில்தார் நாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம், விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனுசு, மாவட்ட பாஜக பொருளாளர் சுகுமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சரவணன், திமுக வழக்கறிஞர் முனவர்ஷெரிப், அதிமுக தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ஆட்சியர் சம்பத் கூறியதாவது: 

விழுப்புரம் மாவட்டத்தில் 12,36,282 ஆண் வாக்காளர்களும், 12,09,641 பெண் வாக்காளர்களும், 201 திருநங்கைகளும் என்று மொத்தம் 24,46,124 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். புதிதாக பெயர் சேர்க்க 1,00,647 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தகுதியற்ற 2332 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக 98315 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் 100 சதவீத புகைப்படங்கள் அமைந்துள்ளது. கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வாக்குச்சாவடி நியமன அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சிறப்பு திருத்த சுருக்க வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

 

அதனை கொண்டு பொதுமக்கள் சரி பார்த்து கொள்ளலாம். மனு கொடுத்தவர்களுக்கு பெயர்கள் சேர்க்கப்பட்டது அல்லது நீக்கப்பட்டது குறித்த விவரங்கள் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

Advertisements