பசுமைபுரட்சியில் ஜமாஅத் நிர்வாகம்


பரங்கிபேட்டை ஜமாஅத்தின் செயல்பாட்டை பாராட்டும் அதே நேரத்தில் இது போல் அணைத்து ஊர் ஜமாத்தும்  இதை  முன் மாதிரியாக எடுத்து செயல் படுத்த வேண்டுகிறோம். நாங்கள் வெளியிடும் அனைத்தையும் பிரிண்ட் எடுத்து ஜமாஅத் நிர்வாகத்துக்கு கொடுக்கும் நல்லவர்கள் இதையும் கொஞ்சம் எடுத்து கொடுக்கவும்.

 

நன்றி : செய்தி மற்றும் படங்கள் உதவி பரங்கிபேட்டை சமூக வலைத்தளம் 

நிலங்களெல்லாம் சிமெண்ட் காடுகளாகவும், மரங்களை கூட்டாக பார்ப்பதே அரிதாகவும் ஆகிபோய் கொண்டுள்ள இந்த கால கட்டத்தில் சத்தமில்லாமல் மௌன பசுமை புரட்சிகளும் நிகழவே செய்கின்றன.  அப்படிப்பட்ட ஒரு அரிய  செயல் நமதூர் கிளுர் நபி பள்ளிவாசலில் நிகழந்து உள்ளது. பசுமை விரும்பிகள் மற்றும் இறையில்லத்தை நேசிப்பவர்களின் கண்களுக்கும் மனங்களுக்கும் குளிர்ச்சியினை தந்து வருகிறது. 

 

 

 

 

 

நமதூரின் மிக பழமையான பள்ளி என்று கருதப்படும் கிளுர்நபிக்கு  சொந்தமான இடத்தில் அதன் நிர்வாகிகளில் ஒருவரும் அதன் இன்றைய சில நல்ல மாற்றங்களுக்கு அடித்தள மிட்டமிட்டவருமான முஹம்மது மக்தூம் உடைய முன்முயற்சினால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் எதிர்காலத்தில் அந்த இடத்தை  ஒரு சோலைவனமாக மாற்றிக்காட்டும். 

 

மஸ்ஜிதுக்கு சொந்தமான இடத்தில் மிகவும் திட்டமிட்டு ஆழ பாத்திகள் அமைத்து சுமார் 250 க்கும் அதிகமான தென்னை கன்றுகள் நடப்பட்டுள்ளன.  இது தவிர எலுமிச்சை, ஆரஞ்சு, கத்திரிகாய், வெண்டைகாய், கொய்யாமரங்கள் உள்ளிட்ட பல்வேறு   பணப்பயிர்கள் தனித்தனியாகவும் ஊடுபயிராகவும் இங்கு நடப்பட்டுள்ளன. 

 

 

இதனை முறையாக பாதுகாக்க பள்ளியினை சுற்றி சுற்று சுவர்கள், கம்பி வேலிகள் (ஆடுமாடு புகா வண்ணம் ) நிறுவப்பட்டுள்ளன. மேலும் இதன் பராமரிப்பிற்கு பள்ளியின் குளத்திலிருந்து திட்டமிட்ட வகையில் தொடராக இணைக்கப்பட்ட நிலை பைப்புகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு சொட்டு நீர் பாசனம் செய்யப்பட்டு உள்ளது. களைகள்  எடுக்கும் பணிகளும் குறிப்பிட்ட நாட்களுக்கொருமுறை நடைபெறுகிறன. 

 

 இன்ஷா அல்லாஹ் இன்னும் சில காலத்தில் இந்த செடி கொடி கன்றுகள் வளர்ந்து மரங்களாக காய்த்து குலுங்குகையில் இந்த இறையில்லம் ஒரு மாபெரும் பூஞ்சோலையாக மட்டுமல்ல இறையில்லத்திற்கு இதனால் கணிசமான வருமானம் கிடைக்கவும் செய்யும். இதனை முன்னெடுத்த இந்த பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவரான முஹம்மது மக்தூம்  உடைய நேரடி பார்வையில் நடைபெறும் இதற்கு பள்ளியின் தற்போதைய முத்தவல்லியான  செய்யது சாகுல் ஹமீது மற்றும் ஏனைய நிர்வாகிகள் லியாகத் அலி, அஷ்ரப் அலி, மற்றும் முஹம்மது பாரூக் ஆகியோரும் தங்களின் பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.   

 

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களுக்கு  சொந்தமான வக்ப் சொத்துக்கள் பல லட்சம் ஏக்கர் கணக்கில் கவனிப்பாரற்றும் ஆக்கிரமிப்புக்களில் சிக்கியும் அழிந்து கொண்டு இருப்பதை நல்லோர்கள் மனம் வெதும்பி பார்த்தும் கேட்டும் வருகிறார்கள். இந்நிலையில் இதுபோன்ற செயல்கள் – பள்ளிவாசல் நிலத்தை அதன் அதிகபட்ச பயனை தருமாறு மாற்றி காட்டியுள்ள – கிளுர் நபி பள்ளி நிர்வாகிகள் குறிப்பாக முஹம்மது மக்தூம் உள்ளிட்டோர் மற்றும் இதற்காக விசால மனதுடன் பொருளுதவி செய்த பெயர் குறிப்பிட விரும்பாத தனவந்தர் ஆகியோர் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

 

 

 

 

இவை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ள சில சகோதரர்களால் பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் முதன் முறையாக கிளுர்நபி பள்ளியின் குளம் தூர் வாரப்பட்டு பெரிதாக ஆழ மற்றும் அகலப்படுத்தப்பட்டது என்பதுவும் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

 

இதுபோல், பள்ளிவாசல் நிலங்கள் முறையாக பயன்படுத்தப்பட்டால்,  பள்ளியின்  வருமானத்திற்காக நிர்வாகிகள் சிரமப்படும்  நிலைமாறி பள்ளி நிர்வாக மேலாண்மை ஒரு புதிய திசையில் பயணிக்க செய்யும் முயற்சியில்  இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்பதில் ஐயமில்லை.

 

Advertisements