ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தின் இன்றைய நிலை!


அல்  ஜஸ்ராஹ் வெளியிட்ட செய்தியை மீள்பதிவு செய்கிறோம்,

புகைப்படம் செய்தி மற்றும் ஆதரவுக்கு நன்றி அல்  ஜஸ்ராஹ் 

 

சமீபத்தில் கோட்டகுப்பதை சேர்ந்த இணயதளத்தில் பள்ளிவாசல் மதில் சுவர்இடிக்கப்பட்டதற்க்கு பள்ளிவாசல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து IUML kottakuppam கட்சியின் அதிகாரபூர்வ இணையததில் பதில் கூறுவது போலவும், பொய்யர்கள்(?) என்று அடையலாம் காட்டியும், செய்தி வெளியிட்டு ஊரின் ஒற்றுமையும் மானத்தையும் காப்பாற்றினார்கள்(?). இதில் இயல்பான கேள்வி ஒன்று வருகிறது, ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தின் மெத்தனபோக்கை சுட்டிகாட்டினால், 

 

  • IUML கட்சிக்கு கோபம் வரவேண்டிய அவசியம் என்ன ?
  • ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் முஸ்லிம் லீக் -கிற்கு சொந்தமானதா ?

அல்லாஹ் வின் சொத்து இதில் பிழைப்புவாதம் செய்துக்கொண்டிருப்பவர்கள், மறுமையை நினைவில் கொள்ளுங்கள், இது பயனளிக்கவில்லை என்றால்… நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தை தேர்தல் நடத்தாமல் சில அரசியல்வாதிகள், நிர்ணயம் செய்கிறார்கள், அவர்களின் போக்கு எப்படிபட்டது என்றால் அரசு புறம்போக்கு நிலங்களை சுருட்டுவதும், பள்ளிவாசல் நிலங்களை அரசுக்கு தாரைவார்பதும், பஞ்சாயத்துக்கு வரும் நிலம் தொடர்பான வழகுகளில் தலையிட்டு வழக்குதரார்கள் இடையே பிரிவினையை அதிகபடுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடைவதுமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கொள்ளைக்கும்பல் தான் ஊரின் போக்கை நிர்ணயம் செய்கிறது, சொரனையற்ற ஒரு சமூகத்தை திட்டமிட்டு உருவாக்கி அதில் பெருமளவு வெற்றியும் கண்டுவிட்டார்கள். இதை எதிர்ப்பவர்களை தனிமைபடுதுவதும் ஊரின் ஒற்றுமை கெடுக்கிறான் என்று குறை கூறுவதும் வழக்கமான ஒன்று, இதனால் காணாமல் போனவர்கள் பலர். 

 

இதில் முஸ்லிம் லீக்கின் பங்கு என்ன?

 

மரணத்தருவாயில் இருக்கும் கட்சியை காப்பற்றவும், ஊர் நிர்வாகம் என்றால் நாங்கள் தான் என்று பெருமை பீற்றிகொள்ளவும், இருபது ஆயிரம் முஸ்லிம்கள் கொண்ட கோட்டகுப்பம் ஒட்டுமொத்த மஹல்லாவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல மாய பிம்பத்தை தங்கள் தலைமைக்கு விளம்பரப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொண்டிருகிறார்கள். இவர்களை திராவிட  கட்சியில்சாக்கடை அரசியல் செய்துக்கொண்டிருக்கும் சிலஅரசியல் வியாதிகள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 

 

ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தின் அவல நிலை! 

 

இன்று உள்ள நிலையில் பள்ளிவாசலின் சொத்துகளின் பட்டியலை பகிரங்கமாக வெளியிடவும் வரவுசெலவு கணக்கை வெளியிடவும் யாருக்கும் துணிச்சல் இல்லை. இ.பி.எதிரில் உள்ள பள்ளிவாசல் சொத்தின் வழக்கு நிலை என்ன? ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்க என்ன செயல்திட்டம் உள்ளது? இது போன்ற பல பதில் தெரியாத கேள்விகள் உண்டு! இந்த லட்சணத்தில் பைத்துல்மால் வேறு. ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே திருமண உதவி என்ற பெயரில் பணத்தை வீண்விரயமாக ஒருவருக்கு வழங்கப்பட்டது. அந்த திருமணத்தில்தான் மணப்பெண், மணமகன் முகத்துடன் போஸ்டர் அடிக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. ஜகாத் என்றால் என்ன?பைத்துல்மாலின் நோக்கம் என்ன? என்ற அடிப்படை கூட தெரியாமல் எப்படி அல்லாஹ்வின் சொத்துகளை நிர்வாகம் செய்வார்கள்?

 

 
கோட்டகுப்பம் குடிகாரர்களின் கூடாராமகவும், விபச்சாரத்தின் தலைமையிடமாகவும், சூதாட்டத்தின் பிறப்பிடமாகவும் மாறிவிட்ட உண்மை எப்போது புரியவரும், நிர்வாகத்திலேயே தவறு செய்பவர்களை வைத்துக்கொண்டு? யாரை இவர்கள் கட்டுப்படுத்த முடியும்? தொலைநோக்கு பார்வையோ, இறையச்சமோ இல்லாதவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்?

 

மதரசாவின் நிலை?

 

புதிய பாடத்திட்டம் இல்லமால், மாணவர்கள் சேர்க்கை குறைந்து மிகவும் மோசமாகவுள்ளது. பெண்கள் மதரசாவின் நிலை சொல்லித்தெரியவேண்டியதில்லை. இந்த நிலை நீடித்தால் இறை தண்டனையை எதிர்பாருங்கள், கண்டும் காணமல் இருக்கும் ஆலிம்களும், உலமாக்களும், அநியாயத்திற்க்கு துனைநிர்ப்பவர்களும் இறைவனிடம் பதில்சொல்லவேண்டிவரும் என்பதை மறந்துவிடாதிர்கள்.
  

 

இவற்றிற்கு மாற்று என்ன?

 

  • நமக்கு ஏன் வீண் வேலை என்று இல்லாமல், சுரண்டி பிழைப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் மீண்டும், மீண்டும் கொள்ளையடிக்க வாய்ப்பு தராமல் குறைந்தபட்ச இறையச்சம் உள்ளவர்களையாவது நிர்வாகத்தில் தேர்ந்தெடுத்து பள்ளிவாசலின் சொத்துக்களை காப்பாற்ற முயற்சி செய்வோம்.

  • ஆலீம்களே…!உலமாக்களே…! இஸ்லாம் என்பது மந்திரம் சொல்லி சடங்கு செய்வது இல்லை மாறாக இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கை நெறி என்பதை புரிந்து, மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லி பகிரங்கமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கும் செயல்களை செய்யுங்கள்.

 

 நம்மை தீமைகளிலிருந்து அல்லாஹ் காப்பானாக.

 
கோட்டகுப்பம் முஹம்மது

ஆதரவுக்கு நன்றி : அல்  ஜஸ்ராஹ் 

Advertisements