தகுதி ஆனவர்களின் (?) ஆதரமற்ற செய்தி- பொதுமக்களே உஷார்


பொதுமக்களே உஷார், யாரை பார்த்து யார் பயப்படுவது.  ஊரில் நடக்கும் செய்திகளை அது எந்த இயக்கம் ஆனாலும் நடுநிலையுடன் அணுகும் நாங்களா இல்லை தெருவில் ஓட்டும் போஸ்டரிலும் உங்கள் மூகம் உங்கள் இணையதளத்திலும் உங்கள் மூகம்  என்று பயம் காட்டும்  நீங்களா ….

கோட்டகுப்பம் இணையதளத்தை பல வருடங்களாக பார்த்து வரும் உங்களுடன் சில விசயத்தை பகிர்ந்து கொள்ள விழைகிறோம். நாம் வெளியிடும் செய்தி யாவும் பல தரப்பு மக்களிடம் இருந்து நமக்கு வருபவை, எல்லா செய்தியும் உறுதி செய்யப்பட்டு தான் வெளியிட படும், சில நேரத்தில் அனுபுவர்களின் உண்மை தன்மை அறிந்து உறுதி செய்யாமல் வெளியிடுகிறோம். அதில் சில தவறு வரும் பட்சத்தில் அதற்காக நாம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருக்கிறோம். . நாங்கள் தான் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு செய்தி கொடுக்கிறோம், ஊரில் தெரு தெருவாக சுற்றி திரியும் நீங்கள் சில மாதங்களுக்கு முன்பு கோட்டக்குப்பத்தில் ஒரு குறிப்பட்ட கடையில் மொபைல் ரிச்சார்ஜ் செய்யும் பெண்களுக்கு அந்த கடை நடத்துபவர்களால் தொல்லை தருவதாக ஒரு பெரிய செய்தி வெளியிட்டார்கள், பின்னர் அந்த கடை காரர்கள் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த பிறகு அந்த செய்தி மறைந்து விட்டது. இது அனைவருக்கும் தெரியும். உங்கள் உண்மை தன்மை எங்கே பொய் விட்டது. நீங்கள் சொன்ன நபிமொழி அப்போது உங்களுக்கு தெரியாதா. ஆர்வ கோளாறு எங்களுக்கு கிடையாது, தொழுகையில் கூட போட்டோ க்கு போஸ் கொடுக்கும் ஆர்வம் எங்களுக்கு கிடையாது. நாங்கள் யார் என்று பலருக்கு தெரியாது, செய்தி தெரிய வேண்டும் என்று தான் நாங்கள் நினைப்போமே தவிர உங்களை போல் தங்கள் படத்தை தங்களே போட்டு வீண் விளம்பரம் செய்யும் வேலை எங்களிடம் இல்லை.

 

 

மேலும் நமதூரில் சமீப காலமாக பல பெண்கள் விட்டை விட்டு ஓடிபோகின்றனர், இதை பற்றி செய்தி வெளியிட சொல்லி நமக்கு பல நண்பர்கள் செய்தி அனுப்பினர். அதனை தொடர்ந்து பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை பாதுகாக்க  சில விடயங்கள் சொல்லியிருந்தோம். இது பற்றி கோட்டக்குப்பம்  மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும்  தெரியும். இந்த கிணத்து தவளைகளுக்கு இந்த விசயம் தெரியாமல் போனது ஆச்சிரியம் தான். இதை பற்றி இவர்கள் அருமை M.P  , கோட்டகுப்பம் ரப்பானிய அரபி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இதை பற்றி தானே  பேசினார், அப்போது ஏன்யா எங்க ஊர் பெண்களை பற்றி பேசுகிறாய் என்று அவரை நீங்கள் கோரோ செய்திர்களா, இல்லை இந்த விசயத்தை அவர் யாருக்கும் தெரியாமல் உங்களுக்கு சொன்னாரா. மேற்படி பேச்சு  ஊர் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாவண்ணம் ரகசியம் காக்காமல் பகிரங்கமா பேசி ஏன் என்று அவரை கேட்டு  வெளியிட்டு ஊரின் மானத்தை காத்திர்களா.அவர் பொதுவாக பெண்களை பற்றி  பேசுவதாக நீங்கள் சொன்னாலும் அதை ஏன் ஏங்க ஊரில் பேசுகிறாய் என்று கேட்பதை விடுத்தது மேலும் அவர் பேசும் பொது நரே தக்பீர் அல்லாஹ்  அக்பர் என்று சொல்லிவிட்டு இப்ப ஏன் துல்லுரிங்க.

வீடியோ நன்றி சேனல் அல்  ஜஸ்ராஹ் 

 

 

ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் எதாவது தவறு செய்தால்  சுட்டி காட்டினால்  இவர்கள் தங்களது கைலியை துக்கி கட்டி கொண்டு களம் இறங்குவார்கள். சுவர் இடித்த பிரச்சனையில் இவர்கள் ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தார்களாம் . அதை இடித்து அந்த கல்லை கொண்டு சமபடுதும் வரை சும்மா இருந்து விட்டு, இப்போது ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தனர் என்று சொல்கிர்களே.இந்த விஷயத்தில் மட்டும் நாம் கவனம் கொள்ள வில்லை என்றால் பத்தோடு இது ஒன்றாக ஆகி இருக்கும்.

 

கிழ் காணும் விசயத்தை நீங்கள் ஒரு மணி நேரத்தில் எடுக்க வேண்டாம் ஒருமாதத்தில் எடுக்க வேண்டாம் பல வருடம் ஆகியும் எடுக்காமல் இருப்பது ஏன், மேலும் நீங்கள் சொல்வது போல்  சம்பவத்தை அறிந்தவுடன் அல்லது பார்த்தவுடன் நிர்வாகிகளை அனுகி நடவடிக்கை எடுக்க முயற்சித்திருக்கவேண்டும், இப்போது கேட்கிறோம், முடிந்தால் செய்து பார் ..

 

 

1. பள்ளிவாசல் சொத்தை பல வருடம் குத்தகை கொடுக்காமல் இருப்பவர்களை  நீங்கள் என்ன செய்திர்கள் ?

 

2. பள்ளிவாசல் வெளியிடும் அணைத்து அச்சு வேலைக்கு நீங்கள் ஒரே ஆட்களுக்கு  ஆர்டர் கொடுக்கும் ரகசியம் என்ன ?

 

3. தமிழ்நாடு அரசு வக்பு வாரியத்தில் கோட்டக்குப்பம் பள்ளிவாசல் சொத்து என்னென்ன என்று பொது மக்களுக்கு சொல்ல முடியுமா ?

 

இதை ஏன் எங்களிடம் கேட்கிர்கள் என்று நீங்கள் நினைத்தால், ஜாமத்தின் பதிலை நீங்கள் தனே வெளியிடுகிர்கள். நீங்கள்  தானே ஜமாஅத், ஜமாஅத் தானே நீங்கள்.

 

 

மேலே இருக்கும் இதற்கு மட்டுமாவது நீங்கள் நடவடிக்கை எடுங்கள்,  அதைவிட்டுவிட்டு ஊரின் ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்தோடு பிரிவினைசெய்திகளை வெளியிடக்கூடாது.

பொய்யான தகவல்களை தெரிவிக்க குர்ஆனையும், ஹதீசையும் பயன்படுத்தாமல் உண்மை செய்திகள் வெளியிட பயன்படுத்துங்கள். இறைவன் உங்களுக்கு தவ்பீக் செய்வானாக. ஆமீன் 

 

Advertisements