கோட்டக்குப்பம் ஜாமத்தின் அதிரடி நடவடிக்கை


கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் சொத்தை அபகரித்தது தொடர்பாக நாம்  வெளியிட்ட செய்தியை அடுத்து சம்மந்த பட்டவர்களை இன்று பஞ்சாயத்து கமிட்டி விசாரித்தது. கூட்டதில் நடந்த சம்பவம் உண்மை என்று சம்மந்த பட்டவர்களால் உறுதி செய்யப்பட்டது. மேலும் தான்  செய்த தவறை ஒத்துக்கொண்டு பஞ்சாயத்து முடிவுக்கு கட்டுபடுவதாக உறுதி அளித்துள்ளார் . 

 

 

பஞ்சாயத்துக்கு பின் கிழ் கண்ட உத்தரவு பிறப்பிக்க பட்டது.

 

1. பள்ளிவாசல் மதரசா சுவற்றை பழைய படி, அதே அளவில் கட்டி கொடுக்கவேண்டும்.

 

2. ஜமாஅத் நிர்வாகத்துக்கு தெரிவிக்காமல் இடித்தால் அவருக்கு அபராதம் விதிக்கபட்டது 

 

3. ஜமாஅத் நிர்வாகம் நிலத்தை அளந்த பிறகு தான் விடு கட்ட ஆரம்பிக்க வேண்டும்.

 

இதற்கு சமந்தபட்டவர்கள்  ஒப்பு கொண்டதாக, நமக்கு பஞ்சாயத் கமிட்டியை சேர்த்த ஹபிபுர் ரஹ்மான்,அப்துல் ரவுப் மற்றும் அமீர் பாஷா அவர்களால் உறுதி செய்யப்பட்டது.

 

 

அதிரடி நடவடிக்கை எடுத்த நமதூர் ஜமாஅத் நிர்வாகத்தை நமது இணயதளம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம், மேலும் இதே போல் ஜாமியா மஸ்ஜித் சொத்தை அனுபவித்து கொண்டு பல ஆண்டுகளாக குத்தகை மற்றும் வாடகை தராதவர்கள் மீது எடுத்தால் நாம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவோம், செய்வார்களா …………………..

Advertisements