தகுதியற்றவர்களிடம் பொறுப்பு


தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது ‘எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள். நூல் : புகாரி 59, 6496

மேலே குறிப்பிட்ட வசனம் உலகம் அழியும் காலத்தை குறித்த வசனம். இந்த வசனம் முலம் உலக அழிவு  நெருங்கி வருவது கோட்டக்குப்பத்தில் சமீப காலமாக தெரிகிறது.  கோட்டகுப்பத்தை நிர்வாகிக்கும் நிர்வாகம் பல வருடங்களாக பொதுமக்களுக்கு பயன் அளிக்காத ஜமாஅத் ஆக மட்டும் இல்லாமல், ஜாமியா மஸ்ஜித் சொத்துக்களையும் நிர்வாகிக்க திறன் இல்லாமல் உள்ளது. இதற்கு பல சான்றுகள் இருந்தாலும், இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விஷயம் கோட்டகுப்பம் பொதுமக்களை அதிர்ச்சிகுள்ளகியுள்ளது . 

 

நடந்த சம்பவம் இதோ :-

 

கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் அடுத்துள்ள பள்ளிவாசல் மதரசா சுற்று சுவர் பக்கத்து  இடத்துக்கு சொந்தகாரர்களால் இடிக்கப்பட்டது. இடித்தவர்கள் சொன்ன காரணம்  JCB  இயந்திரம் தவறாக இடித்தது விட்டது என்று. 100 அடி சுவரை தவறாக இடித்தவர்கள் இடித்த சுவரின் கல்லையும் மண்ணையும் அவர்கள் நிலத்தில் கொட்டி வைத்தது கூட JCB  இயந்திரம் தவறாக செய்தது என்று நாங்கள் நம்புகிறோம். இதில் கொடுமை என்னவென்றால், சுவர் இடித்தது காலை 10 மணிவாக்கில், பள்ளிவாசல் 10 அடி துரத்தில் இருந்தும் ஜமாஅத் நிர்வாகத்துக்கு  தெரியவில்லை என்று நிர்வாகிகள் சொல்வது  பொதுமக்கள் காதில் பூ சுற்றும் வேலை. ஒரு சுவரை பாதுகாக முடியாதவர்கள் தான் பல கோடி பள்ளிவாசல் சொத்தை பலருக்கு தரைவார்த்து கொடுகிறார்கள். இடித்தவர்கள் மீது பஞ்சாயத்தில் விசாரித்து அபராதம் விதிக்க வேண்டும் , புதிய சுவர் கட்டிகொடுக்காமல் அவர்களை விடு கட்ட தடை விதிக்க வேண்டும். மேலும் நிலத்தை அளந்து அவர்கள் அபகரித்த நிலத்தை மீட்கவேண்டும். 

20121229-131529.jpg

20121229-131523.jpg

20121229-131516.jpg

20121229-131507.jpg

20121229-131502.jpg

10 அடி அருகில் இருக்கும் பள்ளிவாசல் சொத்தை பாதுகாக்க  முடியாதவர்கள் சின்ன கோட்டகுப்பம், காட்டுமேடு, பொம்மையார் பாளையம் போன்ற பகுதியில் இருக்கும் (இன்னும் இருக்குதா ???)  பள்ளிவாசல் சொத்துகளை எப்படி பாதுகாப்பார்கள் என்று அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். 

 

Advertisements