கோட்டக்குப்பத்தில் மனிதநேய மக்கள் கட்சி மதுவிற்கு எதிராக பிரச்சார பரப்புரை !


 

தமிழகத்தில் டிசம்பர் 20 முதல் 29 வரை மதுவிற்கு எதிராக பிரச்சார பரப்புரையை மனிதநேய மக்கள் கட்சிஅறிவித்து நடத்தி வருகிறத. தமிழகத்தில் குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை வீதி வீதியாக, வீடு வீடாக மக்களை சந்தித்து ஆட்சியாளர்களின் சூட்சமத்தையும், துரோகங்களையும், மதுவின் தீமைகளையும் விளக்கி பிரச்சார பரப்புரை நிகழ்த்தி வருகிறது.

பிரச்சாரத்தின் நிறைவு பகுதியாக வருகிற 30 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகள் மற்றும் மதுபான கடைகள் முற்றுகையும் அறிவித்துள்ளது மனிதநேய மக்கள் கட்சி.கடந்த மூன்று நாட்களாக விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், செஞ்சி, திண்டிவனத்தை தொடர்ந்து நேற்று (23.12.12) ஞாயிற்றுக்கிழமை கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு  உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மதுவிற்கு எதிராக பிரச்சார பரப்புரை மேற்க்கொண்டனர்.

கோட்டக்குப்பம், சின்ன கோட்டக்குப்பத்தில் தொடங்கிய வாகன ஒலி பெருக்கி பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுர பரப்புரை, தொடர்ந்து ரஹமத் நகர், கோட்டக்குப்பம், கலனி, தந்திரையன்குப்பம், நடுக்குப்பம், இந்திரா நகர், சின்ன முதளியாற்சாவடி, பெரிய முதளியாற்சாவடி (ஆரோவில்)ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து 10,000 துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர். இதன் தொடர்ச்சியாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் மதிப்பிற்குரிய R.M. குணங்குடி ஹனிபா, மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன், ம.ம.க. மா.து.செ. அபூபக்கர் அஜ்மல், மா.தொ.து.செ. சம்சுதீன், த.மு.மு.க. மா.து.செ.முஹம்மது முபீன், நகர நிர்வாகிகள் அப்துல் காதர், அபுதாகிர், தாரிக் அலி, முஹம்மது அலி, முஹம்மது சாதிக், ஹபிப், அக்பர், பாபு, சுலைமான், முன்னாள் நிர்வாகிகள் ரஷீத், ஆதி, யூசுப் மற்றும் ம.ம.க. சார்பு மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா நகர செயலாளர் முபாரக் மற்றும் அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ம.ம.க. நகர தலைவர் தாஜுதீன் தலைமையில் பெரிய முதளியாற்சாவடி (ஆரோவில்), கோட்டக்குப்பம்  காய்தே மில்லத் நினைவு வளைவு, புஸ்தானியா ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாராமும் மேற்கொள்ளப்பட்டது.

13 ஆண்டுகள் பொய் வழக்கில் தமிழக அரசால் சிறைப்படுத்தப்பட்டு, பல கட்ட போராட்டங்களுக்கு பின் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்யப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் மதிப்பிற்குரிய பெரியவர் R.M.குணங்குடி ஹனிபா அவர்களின் பேச்சு அணைத்து மக்களையும் குறிப்பாக தன் முதிய வயதிலும் அவரின் சுறுசுறுப்பும், விவேகமும், பேச்சாற்றலும்  இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. குறிப்பாக காய்தே மில்லத் நினைவு வளைவு அருகில் பேசுகையில், அவர் கண்ணியமிகு காய்தே மில்லத் அவர்களை பற்றிய வரலாற்றை நினைவு கூர்ந்த போது மக்கள் அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர். முன்னதாக மகரிப் தொழுகைக்கு பிறகு கோட்டகுப்பம் முத்தவல்லியை சந்தித்து தன் விடுதலைக்காக போரட்டங்களில் பங்கேற்ற கோட்டகுப்பம் மஹல்ல மக்களுக்கு தன் நன்றியை தெரிவித்ததோடு கோட்டகுப்பத்தின் சீரிய பணிகளுக்காக கோட்டக்குப்பம் த.மு.மு.க வை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.


  

கோட்டக்குப்பத்தில் மனிதநேய மக்கள் கட்சி அரசியலில் நேர்மை, ஆட்சியாளர்களை எதிர்ப்பதில் துணிவு, மக்கள் சேவை என்ற முழக்கத்தோடு அனைத்து சமுதாய மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்று அரசியலில் மாற்று சக்தியாக வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி : செய்தி புகைப்படம் உதவி aljasrah.com

Advertisements