இனி வேண்டாம் சென்னை… புதுச்சேரி போதும்!!!


ஆம் வெளியூர்களில் இருந்து விமான மூலம் வரும் கோட்டகுப்பம் சேர்த்தவர்களே இனி சென்னை விமான நிலையம் வேண்டாமே. நம்ம ஊரிலிருந்து 4.5km தூரம் உள்ள புதுச்சேரி விமான நிலையம் போதுமே…. வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் புதுச்சேரியில் இருந்து விமான சேவை, துவக்கப்பட உள்ளது.

pondy airport pondy airport1 pondy airport2 pondy airport3

புதுச்சேரியில், 1991ம் ஆண்டில், விமான நிலையம் திறக்கப்பட்டு, வாயுதூத் விமான சேவை துவக்கப்பட்டது. ஆனால், ஓரிரு மாதங்களிலேயே, விமான சேவை முடங்கியது. 2004ம் ஆண்டில், தனியார் நிறுவனம் மூலம் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டு, மறுபடியும் நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையில், புதுச்சேரி விமான நிலையத்தில் நடுத்தர விமானங்கள் இறங்க வசதியாக, ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. மூடி கிடந்த விமான நிலையத்திற்கு புத்துயிர் அளிப்பதற்காக, இந்திய விமான நிலைய ஆணையத்துடன், புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.இதன்படி, 75 கோடி ரூபாய் செலவில், விமான நிலையத்தில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓடுபாதையின் நீளம், 1550 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய டெர்மினல் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, விமான சேவையை மீண்டும் துவக்க தீவிர முயற்சியில் இறங்கிய, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜவேலு, விமான நிலைய ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தையும் நடத்தினார்.சென்னை விமான நிலைய ஆணைய கருத்தரங்கக் கூடத்தில், கடந்த மாதம் நடந்த இந்தக் கூட்டத்தில், ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஜெட் கனெக்ட், ஏர் ஏசியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.புதுச்சேரி விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் விளக்கி கூறப்பட்டது. சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ளதால், புதுச்சேரியில் விமான சேவையை லாபகரமாக நடத்த முடியும் என, விமான நிறுவனங்களுக்கு, அமைச்சர் ராஜவேலு அழைப்பு விடுத்தார்.

 

 

இந்நிலையில், வரும் ஜனவரி 15ம் தேதி முதல், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தங்களது விமானங்களை இயக்க ஒப்புதல் தெரிவித்து, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், கடிதம் அனுப்பி உள்ளது. இதையடுத்து, புதுப் பொலிவு பெற்றுள்ள புதுச்சேரி விமான நிலையத்துக்கு, விரைவில் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி அரசு முடுக்கி விட்டுள்ளது.

Advertisements