புதுவையில் ஆட்டோகளுக்கு மீட்டர் கட்டணம்


auto

ஆட்டோக்களில் மீட்டர் கட்டண முறை, புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. புதுச்சேரியில் ஓடும் ஆட்டோக்களில், நவம்பர் 30ம் தேதிக்குள், மீட்டர் பொருத்தி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வேண்டுமென, போக்குவரத்துத் துறை எச்சரித்திருந்தது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டுள்து குறித்து போக்குவரத்து கமிஷனர் சுந்தரேசன் தலைமையில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். வட்டார போக்குவரத்து அதிகாரி ரகுநாத் மற்றும் வாகன ஆய்வாளர்கள், ஊழியர்கள் குழுக்களாக சென்று ஆட்டோ டிரைவர்களிடம் நோட்டீஸ் வழங்கினர்.

 

“ஆட்டோக்களில் இன்று (1ம் தேதி) முதல், கட்டாயம் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும். இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்’ என, நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

 

auto_rate

இதன்படி புதுவை, காரைக்கால், மாகி, ஏனாமில் 2கி.மீ. வரை ரூ.20–ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா ரூ.10வசூலிக்கலாம். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.42, டீசல் விலை லிட்டரூககு ரூ.49.09. ஆனால் புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.81. டீசல் விலை ரூ.51.04. ஆனால் அங்கு ஆட்டோ கட்டணம் முதல் 2கி.மீட்டருக்கு ரூ.14மட்டுமே. கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.6மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

 

பக்கத்து மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோ கட்டணத்தைவிட புதுவையில் நிர்ணயம் செய்துள்ள கட்டணம் அதிகம் என்பதால் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும். போக்குவரத்து துறையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி பொதுமக்களும் மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களில் மட்டுமே பயணிக்கவேண்டும்.

Advertisements