அலட்சிய அதிகாரிகள் – உயிர் பலி கேட்கும் அதிசயம்


கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில்  , அதிகாரிகள் ஆசியுடன் அனுமதியின்றி, 500க்கும் மேற்பட்ட பழைய மரம் சார்ந்த  கடைகள் செயல்படுகிறது. இதனால், போதிய பாதுகாப்பு நடவடிக்கை இல்லாமல் விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது.


சமிப காலமாக கோட்டகுப்பம் பகுதி பழைய பொருட்களுக்கு பெயர் போன ஊராக திகழ்கிறது, இவர்கள் முலம் பல கோடி ரூபாய்க்கு  விற்பனை நடக்கிறது. புதுவையை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு நகரை சேர்ந்தவர்கள், கோட்டக்குப்பத்தில் வந்து மர சாமான்களை கொள்முதல் செய்கின்றனர்.
பழைய பொருட்கள்  மூலம் குறுகிய காலத்தில் கூடுதல் வருமானம் கிடைப்பதால், ஆண்டுதோறும் புதிய  கடைகள் வைக்க உள்ளூர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர், வியாபாரிகள் மிகுந்த ஆர்வமாகி வருகின்றனர்.மர கடைகள் வைக்க, உள்ளூர் தீயணைப்பு துறை, வருவாய்துறை, போலீஸ் துறை என்.ஓ.சி., வழங்கி முடிவில், டி.ஆர்.ஓ., கடை துவங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும், இந்த கடைகளில் போதிய தீ தடுப்பு, பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதை தீயணைப்பு துறை, போலீஸார், வருவாய்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். பட்டாசு கடைகளுக்கு வேண்டிய அணைத்து பாதுகாப்பு அம்சமும் இந்த கடைகளுக்கு வேண்டும். ஆனால் பாதுகாப்பு அற்ற நிலையில் கடைகளுக்கு  மாவட்ட வருவாய்துறை அனுமதி வழங்கியுள்ளது அல்லது அனுமதி இல்லாமல் நடத்த அனுமதித்துள்ளது.


இந்த வகையில் மட்டும்  கோட்டக்குப்பத்தில் உள்ளூர் அதிகாரிகள் ஆசியுடன், 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளில் எந்த தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகள் வைக்கப்படவில்லை. குடோன்கள், கடைகளுக்கு மிக அருகிலே பாதுகாப்பு இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது. 
 இங்கு, விபத்து பாதுகாப்பு அசம்சங்கள் எதுவும் இல்லாததால், சிறு விபத்து நடந்தால் கூட சுற்று வட்டார குடியிருப்புகள், கடைகள் எரிந்து சாம்பலாகி பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சமிபத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு ஆரம்ப எச்சரிக்கை. இந்த விபத்தை அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை ஒன்று கூட இது வரை அதிகாரிகள் எடுக்க வில்லை .குறிப்பாக, கோட்டகுப்பம் புதுவை பகுதி கிழக்கு கடற் கரை சாலை முழுவதும் இது போல் பல கடைகள், குடோன்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளை அதிகாரிகள், “கவனிப்பு’ படலத்தால் ஆய்வு செய்யாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வத்துடன்  கோரிக்கை விடுக்கிறோம்.

Advertisements