கோட்டக்குப்பம் கடலில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணி தீவிரம்


கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்களை தேடும் பணி நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.லாஸ்பேட்டையை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன்கள் வினாயகமூர்த்தி 16, பழனிவேல், 14; பாத்திமா மேல்நிலைப் பள்ளியில், பழனிவேல் 9ம் வகுப்பும், வினாயகமூர்த்தி 8ம் வகுப்பும் படித்து வந்தனர்.நேற்று முன்தினம் காலை இருவரும், அதே பகுதியை சேர்ந்த தங்கள் உறவினர் மகன்கள் இரண்டு பேருடன் கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் அருகே கடலில் குளித்தனர்.அப்போது, சகோதரர்களான பழனிவேல், வினாயகமூர்த்தி இருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். மற்ற இருவரும் தப்பினர்.தகவலறிந்து, அப்பகுதி மீனவர்கள், மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜன், சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் கடலோர காவல் படையின் மூலம் மாணவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டனர். நள்ளிரவு வரை தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

 

நேற்று இரண்டாவது நாளாக கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் கோட்டக்குப்பம் சோதனைக்குப்பத்தில் இருந்து வடக்கே மரக்காணம் எல்லை வரை நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை தேடினர். இன்றும் தேடும் பணி நடக்க உள்ளது. இந்நிலையில் கோட்டக்குப்பம் போலீசார், விக்கி (எ) வினாயகமூர்த்தி, பழனிவேல் இருவரும் கடந்த 21ம் தேதி தந்திராயன்குப்பம் கடலில் குளிக்க சென்றவர்கள் நீரில் மூழ்கி காணவில்லை. அவர்களை பற்றி தெரிந்தால் மாணவர்களின் தந்தை கந்தசாமி லாஸ்பேட்டை:  9629945825, கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் –  0413 2236148, போலீஸ் இன்ஸ்பெக்டர்-9443668131 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisements