கோட்டக்குப்பத்தில் தோன்றிய புதிய அனாச்சாரம்


சென்ற 16.11.12 அன்று நமதூர் ஜாமிஆ மஸ்ஜீத்துக்கு உட்பட்ட ஷாதி மஹாலில் ஒரு பெண்குழந்தையின் பிறந்த நாள் விழா?-! கொண்டாடப்பட்டுள்ளது. அதற்காக நடிகர்கள் புகைப்படத்துடன் குழந்தை மற்றும் பெற்றோர்களின் புகைப்படங்களுடனும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. “எங்கள் தெய்வதிருமகள்”?-! என்ற அல்லாஹுவிருக்கு இணைவைக்கும் வார்த்தைகளை பேனர்களில் பயன்படுத்தியுள்ளன.


பிறந்து நாள் விழா என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால், நமதூர் ஜாமிஆ மஸ்ஜீத் பள்ளி நிர்வாகம் இதுபோன்ற அனாச்சாரமான (பித்-அத்தான) மற்றும் ஷீருக்கான காரியங்களுக்கு மண்டபம் வழங்காமல் இருக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம். இந்த அனாச்சாரத்தை முளையிலே கில்லி எரியவில்லை என்றால், கோட்ட்குப்பதில் இந்த அனாச்சாரம் தலைவிரித்து ஆட துவகும். அல்லாஹ் நமையும், நமது உறையும் காப்பாற்ற வேண்டும்.

 

 

செய்தி உதவி—Salman Farsi

 

 

20121121-050922.jpg

20121121-050927.jpg

20121121-050933.jpg

20121121-050939.jpg

Advertisements