கோட்டக்குப்பத்தில் பயங்கர தீ விபத்து


20121113-092735.jpg

கோட்டகுப்பம் அடுத்துள்ள இந்திரா நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற பழைய பொருட்கள்  விற்கும் மரக்கடையில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் தீ பிடிக்க தொடங்கியது. தீ மளமளவென அருகே இருக்கும் வீடுகளுக்கு  பரவியது. புதுவையில் இருந்து தீ அணைக்கும் வீரர்கள் வந்து போராடி தீயை அணைத்தனர். இதில்   சில வீரர்களுக்கு தீ காயம் ஏற்பட்டது. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரசாமான்கள்  தீகிரையானது  . நமது கோட்டகுப்பம் தமிழ்நாட்டில் இருக்கும் பகுதி, நமதுருக்கு  எதாவது பேரிழப்பு  ஏற்பட்டால் வானூர்ரில் இருந்து தான் தீ அணைக்கும் வண்டி வர வேண்டி வுள்ளது . இன்று நடைபெற்ற தீ விபத்து காலையில் நடைபெற்றது, 2 மணி வரை வானூர் தீ அணைக்கும் வண்டி வரவில்லை. பாண்டியில் இருந்து நமக்கு உதவ வரவில்லை என்றால்  உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் அதிகமாகி இருக்கும். நமதுருக்கு   தனி தீ அணைக்கும் நிலையம் என்று வரும், ஆட்சியாளர்கள் கண் திறப்பார்களா …..


3

Advertisements