இந்த கொசு தொல்லை தாங்க முடியல…மருந்து அடிச்சி கொள்ளுங்கப்பா ….


தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல இடங்களில் மக்களை தாக்கி வரும் மர்ம காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதை யொட்டி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. புதுவை மற்றும் தமிழாக பகுதியில் டெங்கு காய்ச்சலால் இதுவரையில் 4 பேர் பலியாகியுள்ளனர். கொசுக்கடி யால் மட்டுமே இந்நோய் தீவிரமாக பரவி வருவதால் புதுவை நகராட்சி நிர் வாகம்  கொசு மருந்து அடிப்பதில் திடீரென தீவி ரம் காட்டி வருகின்றது.னால் இதுவரை தீவிரம் காட்டாத புதுவை நகராட்சி நிர்வாகம், டெங்கு வால் விழித்துக்கொண்டு கொசுக்களை ஒழிப்பதில் அக்கறை எடுத்து வருகிறது. முழு மூச்சில் கொசு மருந்து களை அடித்து கொசு ஒழிப்பு குறித்து வீடு, வீடாக சென்று அறிவுரை கூறி வருகின்றனர்.கோட்டகுப்பம் பேரூராட்சியில் ஆண்டு முழு வதும் கொசுத்தொல்லை இருந்து கொண் டே இருக்கி றது. ஏற்கனவே மின்சார பிரச்சனையால் கோட்டகுப்பம் பொதுமக்கள் பக்கத்துக்கு மாநிலத்துக்கு புலம் பெயர்ந்து செல்கிறார்கள். 

கோட்டக்குப்பத்தில் உள்ள கடைகள், குடியிருப்புகளில் மாலை மற் றும் இரவு நேரங்களில் வெளியே நிற்கமுடியாத அளவுக்கு கொசுக்கள் மொய்த்து வந்தன. ஆனால் வழக்கம் போல் நமதூர் பேரூராட்சி தூங்கி விழிகிறது. சுகாதார பணிக்காக ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ஒதுக்கப்பட்ட அரசின் நிதியை பயன்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் இன்று 12/11/2012 கொசு மருந்து அடிக்கும் பொது எடுத்த புகைப்படம் 

20121112-165529.jpg

20121112-165535.jpg

Advertisements