பள்ளிவாசல் குத்தகை பாக்கி வைத்திருப்போர் குறித்து, போட்டோவுடன் கூடிய அறிவிப்பு பலகை


 

பள்ளிவாசல்  குத்தகை பாக்கி வைத்திருப்போர் குறித்து, போட்டோவுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்க, கோட்டகுப்பம் ஜமாஅத் முடிவு செய்யவேண்டும். 

 

பள்ளிவாசல்க்கு வர வேண்டிய தொகை வசூலாகாமல் உள்ளது.பள்ளிவாசல் நிர்வாக  பணிகள் தொடர்ந்து நடக்கும் வகையில், விவசாய நிலம், காலியிடம், கடைகள் என வருவாய் தரும் பல சொத்துக்கள் உள்ளன . பல ஆண்டுகளுக்கு முன், பள்ளிவாசல் சொத்துக்கள் குத்தகைக்குவிடப்பட்டதால், சொற்ப அளவிலான தொகையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகையையும் பலர் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.

 

காஞ்சிபுரத்தில் உள்ள மாற்று மத வழிபாட்டு தளத்தில்  , குத்தகை செலுத்தாதவர்களின் போட்டோ மற்றும் பாக்கி தொகை குறித்து பெரிய அளவிலான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. பெயர் வெளியிட்ட பின், பலரும் இதை மானக்கேடாக நினைத்தனர். தினமும் வழிபாட்டு தளத்துக்கு வருகிறவர்கள், காலையும் மாலையும், அப்பெயர் பலகைகளை பார்ப்பதால், தங்கள் வணிகத்திற்கு தடை ஏற்படும் என நினைத்து, பாக்கிகளை செலுத்தி வருகின்றனர். இதையடுத்து, குத்தகை பாக்கி வசூலானது. 

 

இதேபோல், குத்தகைதாரர்கள் பட்டியல்  பெரிய அளவில், கோட்டக்குப்பம் பொதுமக்கள் பார்வையில் தெரியும் வகையில், குத்தகை பாக்கி வைத்துள்ளவர்கள் குறித்து போட்டோவுடன் கூடிய பட்டியலை வைக்க ஜாமியா மஸ்ஜீத்  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

 

இதற்கு முன்னர் இது சம்மந்தமாக நாம் சுட்டிகாட்டிய பதிவு 

Advertisements