கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும்


பட்டாசுக்களை கவனமாக வெடிக்க வேண்டும் என தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.புதுச்சேரி கோட்ட தீயணைப்பு அதிகாரி பல்லா கிருஷ்டைய்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை கவனமாக கையாள வேண்டும்.தடையை மீறி உபயோகித்து, அதனால் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.பட்டாசுகளை நடு வீதியில் வைத்து கொளுத்துவது ஆபத்தானது. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது, பெரியவர்கள் உடனிருப்பது பாதுகாப்பானது.

 

கம்பி மத்தாப்பு போன்றவற்றை எரித்த பின்பு, தண்ணீரில் போட்டு விடுவது பாதுகாப்பானது. பட்டாசுகளை வீடுகளில் வைத்திருக்கும் போது, தீப்பொறி மற்றும் விளக்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெடிக்காத பட்டாசுக்களை நீண்ட குச்சியால் மட்டுமே அகற்ற வேண்டும்.குடிசைப்பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கண்ணாடி பாட்டில், தேங்காய் சிறட்டை, தகரடப்பாவினுள் பட்டாசுக்களை வைத்து வெடிக்கக் கூடாது.வியாபாரிகள் கவனம்அனுமதி பெற்ற வியாபாரிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட லைசென்சில் தடை செய்த பட்டாசுக்களை வாங்கி வைத்திருக்கவோ, விற்கவோ கூடாது.மீறி விற்றாலும்,அளவிற்கு அதிகமான பட்டாசுகளை வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

பட்டாசு கடையில் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்க வேண்டும். புகை பிடிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். 

 

வீரர்கள் தயார் ஏதாவது தீ விபத்துக்கள் நேர்ந்தால், தீயணைப்பு வீரர்கள் நீர்தாங்கி வண்டிகளுடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விரைந்து வரும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டு, தீயணைப்பு கடமையை செய்ய உதவுங்கள்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisements