கோட்டக்குப்பத்தில் புயல் எச்சரிக்கை


20121030-080735.jpg

சென்னைக்கு தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயல் சின்னமாக மாறும் என்றும், இதனால் கன மழை பெய்யும் என்பதாலும்,புதுவையில்  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து  நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையானது, நேற்று அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது முதலில் மேற்கு நோக்கியும்,பின்னர் வடமேற்காகவும் நகரும்.தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை நாகப்பட்டினத்திற்கும்,ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்னும் 48 மணி நேரம் இருப்பதால் காற்றழுத்த தாழ்வு மண்டலம்,இன்று காலை புயல் சின்னமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்.கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களை பொறுத்தவரையில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை வேகமாக வீசக்கூடும்.இதனிடையே கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு 5 ஏற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் கன மழை எச்சரிக்கை காரணமாக புதுவையில்  உள்ள  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

20121030-080740.jpg

20121030-080745.jpg

Advertisements