அபாயம் – கலாசாரத்தால் சீரழியும் கோட்டகுப்பம்


புதுச்சேரிக்கு பக்கத்தில் கோட்டகுப்பம் இருப்பதால் நமதுருக்கு பல நல்ல விஷயம் நடந்தாலும் , ஊரின் பாரம்பரியம் கெடுக்கும் வகையில் பல காரியங்கள் நடந்து வருகிறது.  காலனிக்கு செல்லும் குடிகாரர்கள் குடித்து விட்டு நமதூர் தெரு வழியாக நடந்து போகும் போது தங்கள் கைத்தொலைபேசியில் ஆபாசமாக பாடலை ஒலிக்கவிட்டு, நமதூர் பெண்களை கேலி  செய்து வருவது வாடிக்கையாக நடைபெறுகிறது.  மின்சாரம் இல்லாமல் இருக்கும் இன்றைய சுழ்நிலையில் நமது பெண்கள் மீது குடிகாரர்கள் மேலே விழுந்து அராஜகம் பண்ணுகிறார்கள்.  இன்று 27 /10 /2012  பெரிய தெருவில் குடிகாரர்கள் தங்களுக்குள்  நடந்த  தகராறில் அருகே இருந்த விட்டுக்குள் புகுந்து கலவரம் செய்துள்ளனர். இது சம்மந்தமாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிகபட்டுள்ளது. இது  போல் நடக்கும் விசயத்தை காலனி பஞ்சாயத்தும் அவர்கள் தரப்பு ஆட்களை கட்டுபடுத்துவது கிடையாது, ஜாமியா மஸ்ஜித் நிர்வாகமும் , பள்ளி நிர்வாகத்தை தவிர வேறு விசயத்தில் தலையிடுவது கிடையாது. 

மேலும் சமிபகாலமாக பணம் இருப்பவர்கள் தங்களிடம்  இருக்கும் இடத்தில் கெஸ்ட் ஹவுஸ் கட்டி வாடகை விட்டு வருகிறார்கள். இந்த கலாசாரத்தால் இப்போது கோட்டக்குப்பத்தில் பல கெஸ்ட் ஹவுஸ்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பல வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி  நாட்டினர் நடமாட்டம்  அதிகமாக உள்ளது. பரகத் நகர் போய் இப்போது கோட்டகுப்பம் ஊரின் நடுவே பல கெஸ்ட் ஹவுஸ்  கட்ட  வேலை நடந்து வருகிறது. இதுவும் வந்தால் நமதூர் பாரம்பரியம் அழியும் நாள் அருகில் உள்ளது.  இதையாவது நமது நிர்வாகம் தடுகிறதா, இல்லை வழக்கம் போல்  பொது மக்கள் பாதிக்கும் பிரச்னையில் தலையிடாமல் ஒதுங்கி இருக்குமா என்று பார்போம். இது போல் பொது பிரச்சனையில் பாடு படும் சமூக அமைப்புகளுக்கு நாம் தோள்கொடுப்போம்.

Advertisements