கோட்டகுப்பம் ஆர்ப்பாட்டம் நேரடி புகைப்பட தொகுப்பு


தமிழகத்தில் நிலவி வரும் வரலாறு காணத மின் வெட்டை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலகம் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் எங்கோ சென்று கொண்டு இருக்கும் வேலையில் நமது தமிழகத்தை ஆண்ட இரண்டு கழகங்களும் கற்காலத்தை நோக்கி இழுத்து கொண்டு செல்கிறார்கள். இவர்களின் மோசமான அரசியல் காரணமாக இன்று தமிழகம் இருட்டில் தவிக்கிறது. சென்னையில் இருக்கும் சீமான்களுக்கு ஒரு மணி நேரம் மின் வெட்டு கொடுத்து விட்டு, முழு தமிழகத்துக்கும் 18 மணி நேரம் மின் வெட்டு என்றால் இதன் அர்த்தம் என்ன. சாமானிய பொது மக்களின் பொறுமைக்கு ஒரு அளவு உண்டு. அவர்கள் பொங்கினால் ஆட்சி மாற்றம் நிச்சயம்.

;

கோட்டக்குப்பத்தில் எத்தனை மணிக்கு மின்சாரம் வரும் எப்போது போகும் என்று யாருக்கும் தெரியாது. சென்ற ஆட்சி யில் 4 மணி நேரம் மின் வெட்டு இருந்தது, இன்று 4 மணி நேரம் மின்சாரம் இருந்தாலே பெரிய விஷயம்.

;

இதை கண்டித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு அணைத்து கட்சி மற்றும் அணைத்து தரபினரும் கை கோர்ந்து இந்த போராட்டத்தை முன் எடுத்தனர். கோட்டகுப்பம் வணிக நிறுவனங்கள் அனைத்தும் இன்று மூடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோட்டக்குப்பத்தில் உள்ள அணைத்து முஸ்லிம் ஜமாஅத், மீனவ மக்களின் பஞ்சாயத், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்ட போராட்டத்தை நுற்றுக்கு அதிகமான போலீசார் பாதுகாப்பு கொடுத்தனர். அணைத்து கட்சி பிரமுகர் மற்றும் சமுதாய தலைவர்கள் தள 10 நிமிடம் பேசி தங்களது கருத்தை பதிவு செய்தனர். இன்று நடைபெற்ற போராட்டம் வெற்றி போராட்டமாக ஆகி ஆட்சியாளர்கள் தடை இல்ல மின்சாரம் கொடுக்க வேண்டும்.

This slideshow requires JavaScript.

Advertisements