ஓட்டு பதிவின் அவசியத்தை வலியுர்த்தி விழிப்புணர்வு பேரணி


கோட்டக்குப்பத்தில், ஓட்டுப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணியை, வானூர் தாசில்தார் குமாரபாலன் துவக்கி வைத்தார். கிழக்கு கடற்கரை சாலை, பழைய பட்டினப்பாதை வழியாக கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தது.

பேரணியில், 18 வயது பூர்த்தி செய்தவர்கள் அவசியம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும், தேர்தலில் தவறாது அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தேசிய செஞ்சிலுவை சங்கம், பசுமைப் படை, சாலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் பங்கேற்றனர்.

துணை தாசில்தார் பாலசுப்ரமணியம், சப் இன்ஸ்பெக்டர்கள் துரைசாமி, அறிவழகி, முரளி, வி.ஏ.ஓ., சந்திரன், பள்ளி தலைமையாசிரியர் வத்சலா, உடற்கல்வி ஆசிரியர் மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisements