மழை வேண்டி தவ்ஹித் ஜமாஅத் தொழுகை


வெயிலின் வெப்பம் அதிகரித்ததாலும் மற்றும் பருவ மழை பொய்த்துப் போனதாலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் வற்றிப் போகும் நிலை உருவாகியுள்ளது. அணைகளின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

விவசாயம் பாதிக்கப்பட்டு விலைவாசிகள் உயர்வு ஏற்பட்டுள்ளது. குளங்கள் வற்றி விட்டன. மேலும் தண்ணீர் இல்லாத காரணத்தால் மின் உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையை பொழியச் செய்பவன் இறைவன் என்பதால் அந்த இறைவனிடத்தில் பணிந்து பிரார்த்தனை செய்வது தான் இதற்கு ஒரே வழி என்று இஸ்லாம் கூறுகின்றது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டகுப்பம் கிளையில் கடந்த 23.09.2012 ஞாயிற்று கிழமை  காலை 7.30 மணிக்கு கோட்டகுப்பம் தைக்கால் திடலில் மழைத் தொழுகை நடைபெற்றது. ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

 

 

20120923-220856.jpg

20120923-220908.jpg

20120923-220913.jpg

20120923-220902.jpg

20120923-220919.jpg

20120923-220924.jpg

 

 

தகவல் : சல்மான் பார்சி 

Advertisements