முஸ்லிம்களே தமிழக அரசியல் கட்சிகளை புரிந்து கொள்ளுங்கள்!


நபி [ஸல் ] அவர்களை இழிவு படுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்பட விசயத்தில் அறிக்கை விட்டதற்காக வைகோ வுக்கு  மட்டும் தான்  முஸ்லிம்களிடம் வாக்கு கேட்க தகுதி உள்ளது என முகநூலில் செய்தி வருகிறது! எரிகின்ற  வீட்டிலும் வாக்கு அரசியல் செய்வது வேதனை !  அறிக்கை விட்டதற்க்காக வைகோ வை பாராட்டுகிறோம்! ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவை ஆதரித்த நிலைப்பாடை என்ன செய்வது?  வெறும் அறிக்கைக்கே முஸ்லிம்களிடம் வாக்கு கேட்கும் அருகதை வரும் எனில் அதே அறிக்கையை ராமதாஸ், சீமான் போன்றவர்களும் விட்டுள்ளனர். அறிக்கையோடு நில்லாமல் போராட்டம் நடத்திய திருமாவள்வனுக்கு அதிக அருகதை உள்ளதே! 

 

அன்பான சகொதரர்களே ஓன்றைப புரிந்து கொள்ளுங்கள்.  ரஷ்யாவில் பகவத் கீதையை தடை செய்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது இங்கு பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு பேசியதை எண்ணிப் பாருங்கள்!   எந்த அரசியல் கட்சியும் நமக்கு உளமார போராட மாட்டார்கள். நம் ஓட்டுக்காகவே போராடுவார்கள்!   நமக்காக நாம் தான் போராட வேண்டும் ! அதிமுக ,திமுக காங்கிரஸ், தேமுதிக , கம்யுனிஸ்ட் கட்சிகள் இன்னும் வாய் திறக்கவில்லை என்பதை உணர்ந்து அதில் முஸ்லிம்கள் புரிந்து அந்தக் கட்சிகளில் இருந்து வெளியேற   வேண்டும்!   

Advertisements