சிறைவாசிகளுக்கான விடுதலை குரல்!!


தமிழகத்தில் 10 ஆண்டிற்கு மேல் சிறைவாசம் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது. இதன் அடிப்படையில் வருடாவருடம் அண்ணா பிறந்த நாள் அன்று, பொது மன்னிப்பு வழங்கி 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து வருகிறது தமிழக அரசு. ஆனால் ஒரு சமுதாயத்தை மட்டும் பாரபட்சம் காட்டி, தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது தமிழக அரசு. முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று சொல்லும் கருணாநிதியின் துரோகம் மன்னிக்க முடியாதது. கடந்த அவர் ஆட்சி காலத்தில் லிலாவதி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த தன் கழக உடன்பிறப்புகளுக்காக பொது மன்னிப்பு 10 ஆண்டுகள் என்றிருந்ததை 7 ஆண்டுகளாக குறைத்து அவர்களை விடுதலை செய்தார் ஆனால் கோவை குண்டு வெடிப்பில் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் மற்றும் 14 ஆண்டுகள் கழித்திருந்த முஸ்லிம் சிறைவாசிகளை கண்டுகொள்ளவில்லை, அவர்களில் பலர் உடல் நிலை குறைவால் அவதிப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்கள் முறையான மருத்துவ வசதிகூடம் கிடைக்காமல். இப்படி இவர் துரோகங்கள் பல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அ.தி.மு.க அரியணை ஏறிய பிறகு த.மு.மு.க, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், மற்றும் பல அமைப்புகள் இந்த வருடம் தமிழகம் முழுவதும் பொது கூட்டங்கள் நடத்தி தமிழக அரசுக்கு முஸ்லிம் சிறைவாசிகளின் முன் விடுதலைகான கவனத்தை எடுத்து சென்றுள்ளது. 

இதுவரை பொதுக்கூட்டங்கள் மூலம் வலியுறுத்தபட்ட நிலையில்… இதன் தொடர்ச்சியாகதமிழகத்திலேயே முதன் முதலாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில், த.மு.மு.கமுஸ்லிம் சிறைவாசிகளின் முன் விடுதலை கோரியும்… முஸ்லிம்களின் 3.5 % இட ஒதுக்கீட்டை 7 % மாக உயர்த்த கோரியும்… மாபெரும் இரட்டை கோரிக்கை கவனஈர்ப்பு  ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவத்திலேயே கோட்டக்குப்பத்தில் தான் முஸ்லிம்கள் பெரும் அளவில் வசிகிறார்கள். இங்கு நமக்காகவும், நம் சகோதரர்களுக்காகவும் நம் சகோதரர்கள் நடத்தும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வது நம் அனைவரின் கடமையாகும். இன்ஷா அல்லாஹ், நம் பலத்தை காட்டியே அரசின் கவனத்தை ஈர்க்க முடியும்.

ஆகையால் வருகிற  ஞாயிற்றுக்கிழமை, நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் கலந்துக்கொண்டு இன்ஷா அல்லாஹ், இந்த ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்வோம்! வர இயலாத வெளிநாட்டில் வாழும் நம் சகோதரர்களே… நம் சகோதரர்களின் விடுதலைக்காகவும், நமக்கான இட ஒதுக்கீடு உயர்த்தவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்!!

   

நாள் : 09.09.2012   ஞாயிற்றுக்கிழமை 

          இடம் : கோட்டக்குப்பம் பேரூராட்சி திடல் 

                                                                   நேரம் : மாலை 3 மணி


இச்செய்தியை முடிந்தவரை சமுதாய சகோதரர்கள்

அனைவருக்கும் எடுத்து செல்வோம்!

 இன்ஷா அல்லாஹ், ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்வோம்!!


          கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க நடத்தும்

மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!


ஒடுக்குபவர்கள் இணைந்து நிற்கின்றார்கள். ஒடுக்கப்படுபவர்களாகிய

நாம் தனித்து நிற்காமல் இணைந்து போராடினால் தான் வெற்றியை நமதாக்க முடியும்!

 நம் சகோதரர்களின் விடுதலைக்காக குரல்

கொடுப்போருக்கு தோள் கொடுப்போம்!

இஸ்லாமிய சிறைவாசிகளை மீட்டெடுப்போம்!! 

தகவல் : அல்-ஜஸ்ராஹ்

Advertisements