கோட்டக்குப்பத்தில் பதற்றம் போலீஸ் குவிப்பு …..


கோட்டக்குப்பம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். தனியார் டிராவல்ஸ் காரில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு சுமார் 11.45 மணிக்கு அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். அதே ஓட்டலில் புதுவையை சேர்ந்த வாலிபர்கள் சாப்பிட வந்தனர். அப்போது ஓட்டலில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த புதுவையை சேர்ந்த வாலிபர்கள் அங்கிருந்த மரக்கட்டைகளை எடுத்து வினோத்குமாரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். 

அவரை காப்பாற்ற சென்ற அரியாங்குப்பத்தை சேர்ந்த சபரியும் தாக்கப்பட்டார். இதில் உயிருக்கு போராடிய வினோத்குமார் சிறிது நேரத்தில் இறந்தார். சம்பவ இடத்துக்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார் வினோத்குமார் உடலை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

காயமடைந்த சபரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே வினோத்குமாரின் உறவினர்கள் கோட்டக்குப்பம் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பத்தை சேர்ந்த முத்துகருப்பன்(20), மணவாளன்(19), புதுவை சின்னையாபுரத்தை சேர்ந்த வாசு(25) ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று 03/09/2012 கோட்டக்குப்பத்தில் அணைத்து கடைகளையும் முடும்மாறு கொலையுண்டவரின் உறவினர்கள் தகறாரு செய்தார்கள், அதன் காரணமாக கோயில் மேட்டில் பல கடைகள் மூடப்பட்டுள்ளது, பதற்றம் ஏற்படாமல் போலீஸ் காவல் போட பட்டுள்ளது.

20120903-090136.jpg

20120903-090142.jpg

20120903-090148.jpg

Advertisements