சிதைந்து போன சாலை! செவி சாய்க்காத பேரூராட்சி!!


சின்ன கோட்டகுப்பம் பள்ளிவாசல் அருகில் உள்ளா அய்மான் வீதியில் கடந்த பிப்ரவரி மாதம் சிமெண்ட் சாலை போடப்பட்டது. இந்த சிமெண்ட் சாலையை தி.மு.க ஆட்சிகாலத்தில் சாலை போடுவதற்கு பேரூராட்சி அனுமதி வழங்கியது அதன் பின் நடந்த ஆட்சி மாற்றத்தால் கடந்த பிப்ரவரி மாதம் தான் சிமெண்ட் சாலை போடப்பட்டது. சாலை போடப்பட்ட இரண்டு மாதத்திலேயே லாரி கனத்தை கூட தாங்க முடியாமல் சாலை சேதம் அடைந்தது அதை தொடர்ந்து உடனடியாக பேரூராட்சி செயல் அலுவலர் பிரபாகரனிடம் (தற்போது இவர் பனி மாற்றம் செய்யபட்டுள்ளார்) தெரு வாசிகள் புகார் அளித்தனர் அதனை எற்ற செயல் அலுவலர் ஒரு வார காலத்துக்குள் சரி செய்து தருவதாக வாகுறுதி அளித்தார் ஆனால் மூன்று மாதம் ஆகியும் இன்று வரை அந்த பகுதியை எட்டிகூட பார்க்கவில்லை நம் கோட்டகுப்பம் பேரூராட்சி நிர்வாகம். பொதுவாக வார்டில் உள்ள பிரச்சனைகளை அப்பகுதி தி.மு.க கவுன்சிலர் சரவணனிடம் பொதுமக்கள் முறையிட்டாள். “ஆளும் கட்சி ஆட்சி நடக்கிறது நான் சொன்னால் கேட்க மறுக்கிறார்கள் நான் என்ன செய்வது”  என்று பதில் அளிக்கிறார். மாதம் மாதம் ஆளும் கட்சி யிடம் கமிஷன் வாங்க திராணி இருக்கிறது, ஆளும் கட்சி டெண்டர் எடுத்தால் கமிஷன் வாங்க திராணி இருக்கிறது, அரசு வழங்கும் சலுகைகளை உரிய பயனாளிகளுக்கு பெற்று தருவதில் கமிஷன் வாங்க திராணி இருக்கிறது… அனால் சேதம் அடைந்த சாலையை பேரூராட்சி சரிசெய்து தர திடமாக வலியுறுத்த திராணி இல்லையென்றால்… பொதுமக்களுக்கு உதவாத அந்த பதவி எதற்கு? தூக்கி எரிந்து விட்டு போக வேண்டியதுதானே. 
 

அதிகரித்து வரும் விடுதிகளால் கோட்டக்குப்பம் பேரூர் இன்று விழுப்புரம் மாவட்டத்திலேயே முதன்மை விபசார நகரமாக மாறி வருகிறது (போலிசின் துணையுடன்). இதை தடுக்க யாருமே இல்லையா என்ற நேரத்தில்தான் சினிமா பட ஹீரோ போல் வந்தார் கோவிந்தன். இவர் கோட்டக்குப்பம் பேரூராட்சியின் முதலாவது வார்டு பா.ம.க கவுன்சிலர். கவுன்சிலராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை பல எதிர்புகளை மீறி, பல சவால்களை தாண்டி, பல அச்சிறுதல்களை எதிர்கொண்டு துணிச்சலுடன் விபசார விடுதிகளை ஒழிப்பதில் முழு வீசியில்  செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இவருக்கு மட்டும் எப்படி இருக்கிறது இந்த திராணி.

 
ஓராண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில் நீங்கள் சாதித்ததை பட்டியலிட கடமைபட்டுள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர். ஊழலற்ற உள்ளாட்சியை உருவாக்கமுடியவில்லை என்றாலும் பரவா இல்லை. மனசாட்சிக்கு அஞ்சி மக்களுக்காக உழையுங்கள். கூலியை இறைவன் கொடுப்பான்.

தகவல் : நன்றி அல் ஜஸ்ராஹ் 
Advertisements