அடாவடிக்கும் புதுவை நகராட்சி


புதுவை நகராட்சி கோட்டகுப்பத்தை தனது குப்பை கொட்டும் இடமாக பயன் படுத்தி வருவதை மக்கள் அதிர்ச்சியுடன் பார்கிறார்கள், இரவில் யாருக்கும் தெரியாமல் கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலை ஒட்டிய பகுதியில் லாரியில் வந்து குப்பை கொட்டி செல்வதை வாடிக்கையாக புதுவை நகராட்சியில் குப்பை அள்ளும் ஒப்பந்த தாரர்கள் செய்து வருகிறார்கள். பல நாட்களுக்கு பிறகு விழித்த நமது கோட்டகுப்பம் பேரூராட்சி நிர்வாகம், இங்கு குப்பை கொட்ட கூடாது என்று அறிவிப்பு வைத்து உள்ளார்கள். இரவில் வரும் இவர்களை லாரியுடன் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தல் இவர்கள் தொல்லை நிற்கும் . மேலும் இந்த இடத்தில் மனை வாங்கி போட்டவர்கள் தடுப்பு வேலி அமைத்து தங்கள் இடத்தின் உரிமையை பாதுகாக்கவும்.

20120826-153414.jpg

20120826-153419.jpg

Advertisements