கோட்டகுப்பம் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள்


தானே புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் தமிழக அரசின் நலத்திட்டங்களில் பங்கேற்றிட வேளாண்மை துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தானே புயலால் பாதிக்கப்பட்ட மாத்தூர், பொம்மையார்பாளையம் மற்றும் கோட்டக்குப்பம் கிராமங்களில் சுமார் 306 ஹக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தென்னை மரங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ஹக்டருக்கு ரூ.9 ஆயிரம் இழப்பீட்டு தொகை தமிழக அரசினால் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளுக்காக மரம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் வேளாண்மைதுறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு திட்ட அலுவலர்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு சுமார் 28 ஆயிரம் மரங்களுக்கு 285 விவசாயிகளுக்கு இரும்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிமூலம் வினியோகிக்க நிதி வழங்கப்பட்டுள்ளது.

மரங்கள் அப்புறப்படுத்திய இடங்களில் புதியதாக கன்றுகளை நட்டு நடவு செய்யும் பணியினை ஆடி மாத்திலேயே செய்தால் கன்றுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மான்யமும் அளிக்கப்படுகிறது.

தென்னை நடவுகளில் ஊடுபயிராக மணிலா, உளுந்து, மரவள்ளி, வாழை, சேனைக்கிழங்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளலாம். தென்னை நடவு செய்திட விவசாயிகள் குழி எடுத்தவுடன் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்புகொண்டு தென்னங்கன்று களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை வேளாண்மை உதவி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisements