கோட்டக்குப்பத்தில் பைசா கோபுரம்!


நன்றி : படங்கள் கட்டுரை உதவி – அல் ஜஸ்ரா 

கோட்டக்குப்பம் ஈத்காஹ் மைதானம் அருகில் அமைந்துள்ள மின்மாற்றிகம்பம்(transformer) பலத்த சேதம் அடைந்துள்ளது. இது எந்நேரமும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதை பற்றி நன்கு அறிந்தும் பலமுறை முறையிட்டும், நம் கோட்டக்குப்பம் மின்சார வாரிய அதிகாரிகளோ இதை பற்றிய அக்கறையே இல்லாமல் இருந்து வருகிறார்கள். 

ஒரு வேலை இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் இரு கம்பங்களும் உடைந்தால் மின் கம்பி அறுந்து மின்மாற்றி வெடிக்கவும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது (உயிர் பலிக்கும் வாய்ப்பு உள்ளது).  புஸ்தானியா பள்ளிவாசல் எல்லையில் தொடங்கி இந்திரா நகர் வரை உள்ள  மின்மாற்றிகளுக்கு இந்த மின்மாற்றிதான் ச்விட்சாக(switch) இருக்கிறது. இதில் பாதிப்பு ஏற்பட்டால், இதை சரி செய்ய குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் ஆகும். இந்த இரண்டு நாட்களும் கோட்டக்குப்பம் முழுமையான மின் தடையை சந்திக்க நேரிடும். இது லைலதுல் கதர் இரவு அன்று நேர்ந்தால்… மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்படுவார்கள். தானே புயலுக்கு பாதிக்கபட்ட இந்த  மின்மாற்றியின் கம்பங்கள் இன்று வரை சரி செய்யபடாமல் இருப்பது அதிகாரிகளின் அலசியத்தையே காட்டுகிறது. பேராபத்து நம்மை நெருங்கி வருவதை கொஞ்சும்கூட கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது நம் கோட்டகுப்பம் மின்சார வாரியம். 

மாதந்தோறும் Maintenance Power Shutdown என்ற பெயரில் இவர்கள் என்ன கிழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இறைவன் ஒருவனே அறிவான்.

இந்த புகாரை பொது மக்கள் த.மு.மு.க சகோதரர்கள் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர். த.மு.மு.க சகோதரர்கள் அதிகாரிகளை இன்று(திங்கட்கிழமை) சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக பொது மக்களிடம் உறுதியாளிதுள்ளனர்

Advertisements