ஜாமியா மஸ்ஜித் வணிக வளாகம் – அதன் பின்னணி ?


20120717-210133.jpg

20120717-210155.jpg

நாம் இதற்கு முன்பு பள்ளிவாசல் சொத்து கொள்ளை போவதை பற்றி நமது இணையத்தளத்தில் வெளியிட்ட (இதை பற்றி மேலதிகமாக தெரிந்துகொள்ள இதை அழுத்தவும்) உடன் இந்த நடவடிக்கை வேகம் எடுத்துள்ளது. பல ஆண்டுகளாய் தயங்கிய ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் தற்போது எடுத்துள்ள முடிவு பாராட்ட பட வேண்டியது. . இது போல் பல பள்ளிவாசல் சொத்துகள் பலர் வசம் பல ஆண்டுகளை இருக்கிறது, அது  அனைத்தையும் மறுபடியும் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் தன் வசம் எடுத்து, தேவை ஏற்பட்டால் பொது ஏலம் முலம் வேறு ஒருவருக்கு அந்த சொத்தை கொடுக்கலாம். உதாரணமாக கோட்டகுப்பம் தபால் நிலையம் எதிரில் பல ஆண்டுகள் சட்ட போராட்டம் முலம் கிடைத்த சொத்தை இன்று வரை ஒரு தனி நபர் குறைந்த வாடகையில் இருந்து வருகிறார். மேலே இருக்கும் இடத்தை விட அதிக பரபளவு கொண்ட இந்த இடத்தையும் கையகபடுத்தி அதில் ஒரு வணிக வளாகம் கட்டினால் நல்ல வருமானம் கிடைக்கும்,  அந்த தனி நபரிடம் இருந்து அந்த சொத்தை ஜாமியா மஸ்ஜித் திரும்ப வாங்குமா..

 

மேலும் இதில் கட்டும் கடைகளை ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினற்கு கொடுக்க கூடாது. மேலும் அதிக பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒருவரிடம் அந்த கடை இருக்க விடாமல் ஒப்பந்தம் போடவேண்டும். இதனால் ஒரே நபர் குறைந்த வாடகை கொடுப்பதை தடுக்கலாம். 

 

 

மேலும் வருமானத்துக்கு பல வழிகளில் முயற்சி மேற்கொள்ளும் ஜாமியா மஸ்ஜித், அதே நேரத்தில் செலவையும் குறைக்கும் நோக்கில் சில நடவடிக்கை எடுத்தல்  கோட்டக்குப்பத்தில்  தல கட்டு கட்டும் பொது மக்கள் சந்தோஷ படுவார்கள். 

 

ஜாமியா மஸ்ஜிதில் நிர்வாகம் எதற்கெடுத்தாலும் நோட்டீஸ் அடிக்கும் செயலை விட வேண்டும்,  தோப்பு தேங்காய் க்கு கூட ஏலம் விட்டு அதில் யார் அதிகமா தருபவர்களுக்கு தோப்பை நிர்வாகிக்க தரும் நிர்வாகம், இந்த நோட்டீஸ் விசயத்தில் குறைந்த விலை கொடுக்கும் பிரிண்டிங் பிரசுக்கு ஏன் வேலை கொடுக்க கூடாது. இதனால் ஒரு குறிப்பிட குடும்பம் பல தலைமுறையாக பள்ளிவாசல் பணத்தை சாப்பிட்டு வருகிறது. அப்படி செய்வதை தடுபவர்கள் யார். மேலும் இதற்கும் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை பொது டெண்டர் விட்டு குறைந்த விலையில் நோட்டீஸ் அடிபவர்களுக்கு கொடுக்கலாம். இதன் முலம் நிர்வாக செலவு குறையும்.

இது போல் பல சீர்திருத்தம் செய்தால் நமது ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்தில் பணம் பல விதத்தில் வரும், மேலும் பல ஆண்டுகளை கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்த செலவும்  நிற்கும். 

 

ஆண்டவனின் இல்லத்தை நிர்வாகிக்கும் நிர்வாகிகள் மற்றும்  பள்ளிவாசல்ளால் பயன் பெரும் வணிகர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளட்டும், 

Advertisements