கோட்டகுப்பம் வழியாக பிரதமர் மன்மோகன் சிங் பயணம்


This slideshow requires JavaScript.

பிரதமர் மன்மோகன் சிங், இரண்டு நாள் பயணமாக நாளை (29ம் தேதி) புதுச்சேரி வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுச்சேரிக்கு நாளை (29ம் தேதி) வருகிறார். மாலை 3 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்திறங்கும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு, புதுச்சேரி பல்கலைக்கழக ராஜிவ்காந்தி கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை தருகிறார்.

 

பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, பார்வையிடும் பிரதமர், மாலை 5 மணிக்கு, கார் மூலம் ராஜ்நிவாஸ் செல்கிறார். கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். அடுத்த நாள் (30ம் தேதி) காலை 10 மணிக்கு, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், பிரதமர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பகல் 11 மணிக்கு, ஹெலிகாப்டரில், சென்னை வந்து, டில்லி செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப் படுத்தியுள்ளனர்.

 

பிரதமர் மன்மோகன் சிங் வருகையொட்டி, தமிழக எல்லையில் பாதுகாப்பு பணிகளுக்காக 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் நடக்கும் பல்கலையில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள, பிரதமர் மன்மோகன் சிங் நாளை புதுச்சேரிக்கு வருகிறார். புதுச்சேரி பல்கலையில் நடக்கும் விழாவில் கலந்து கொண்ட பின், ராஜ்நிவாசில் இரவு தங்குகிறார். அதன் பிறகு 30ம் தேதி, ஜிப்மர் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.

புதுச்சேரி பல்கலைக் கழக வளாகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள, மாநில எல்லையைக் கடந்து கோட்டகுப்பம் வழியாக பிரதமரின் வாகனங்கள் வர உள்ளதால், தமிழக காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisements