சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, அர சால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பை சேர்ந்த சிறுபான்மை மாணவர்க ளுக்கு கல்வி உதவி தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு இறுதி தேர்வில் மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகள் மற்றும் நலவாரியங்களில் மூலம் உதவி தொகை பெறக்கூடாது. ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மட்டும் உதவி தொகை வழங்கப்படும். புதிய விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை வருகிற 15-08-12ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து அதற் கான கேட்பு பட்டியலை உரிய படிவத்தில் பதிவு செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் 25-08-12ம் தேதிக் குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisements