இ.சி.ஆர்., சாலையில் மின் விளக்குகள் பொருத்தப்படுமா?


 

 

கிழக்கு கடற்கரை சாலையில், வாகனங்கள் காலதாமதம் இல்லாமல் செல்லும் வகையில், கோட்டக்குப்பத்தில் ஆரம்பித்து, கருவடிக்குப்பம் வரை, பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.பைபாஸ் சாலையில் போக்குவரத்து முழுவீச்சில் துவங்கி விட்டது. ஆனால், 1.5 கிலோ மீட்டர் நீளமே உள்ள பைபாஸ் சாலையில், மின் விளக்கு வசதி செய்யப்படவில்லை.சாலை, இருளில் மூழ்கி கிடப்பதால் விபத்து அபாயம் எழுந்துள்ளது.இருட்டை பயன்படுத்திக் கொண்டு, சட்டத்திற்கு புறம்பான செயல்களும் நடந்து வருகிறது.வயல்வெளி, தென்னந்தோப்புகளுக்கு மத்தியில், சுமார் 15 அடி உயரத்துக்கு மண் கொட்டி உயரமாக்கப்பட்டு, பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில் எந்தவித தடுப்பும் இதுவரை அமைக்கப்படவில்லை.இருளில் செல்லும் வாகனங்கள் சற்று தடுமாறினாலும், சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

 

பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன், பைபாஸ் சாலையில், மின் கம்பங்களை நிறுவி, மின் விளக்குகளை?அமைக்க வேண்டும்.

Advertisements