கோட்டக்குப்பத்தில் பந்த் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு


இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 23 ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டங்களும் நடந்து வருகின்றன. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்று 31 ம் தேதி நாடு தழுவிய பந்த் போராட்டத்துக்கு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இடதுசாரி கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்தன. அதற்கு பல கட்சிகளும் தொழிற்சங்க அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. சமூக சேவகர் அன்னா ஹசாரேவும் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கோட்டக்குப்பத்தில் பல இடங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

Advertisements