ஏறும் விலைவாசி… எப்படி சமாளிக்கலாம்?


 

 

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால், விலைவாசி உயர்வோ நாளுக்கு நாள் றெக்கைக் கட்டி பறந்து கொண்டிருக்கிறது. வாங்குகிற சம்பளம் முழுவதையும் விலையேற்றம் சுரண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமையைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ற்கெனவே பால், பருப்பு, காய்கறி, மின்சாரம் என வீட்டுக்குத் தேவையான எல்லா பொருட்களும் எக்கச்சக்கமாக விலை ஏறிக் கிடக்க, தற்போது பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 8 ரூபாயை உயர்த்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கிறது மத்திய அரசு. இந்த விலை உயர்வால் விலைவாசி இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் வியாபாரிகள்.

 

 

இந்தச் சூழலில் எகிறிவரும் விலைவாசியை சமாளிக்க என்ன வழி என நிதி ஆலோசகர் முத்து கிருஷ்ணனிடம் கேட்டோம். பளிச்சென பிராக்ட்டிக்கல் டிப்ஸ்களை அள்ளித் தந்தார் அவர். இதோ அந்த வழிகள்:

 

 

”விலைவாசி உயர்வை கட்டுப் படுத்துவது அரசாங்கத்தின் கையில் தான் இருக்கிறது. விலைவாசியைப் பொறுத்தவரை இனி அதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியுமே தவிர, பெரிய அளவில் குறைக்க முடியாது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் விலைவாசி இன்னும் அதிகரிக்கவே செய்யும். பெட்ரோல் விலை இப்போது உயர்ந்திருப்பதுகூட இதன் எதிரொலிதான்.

தவிர்க்கவே முடியாது என்கிற அளவுக்கு வந்துவிட்ட இந்த விலையேற்றத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகளை கற்றுக் கொள்வதே இப்போதைக்கு புத்திசாலித்தனமான முடிவாகும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இனி சொல்கிறேன்.

திட்டமிடல்!

 



விலைவாசி உயர்வை சமாளிப்பதன் முதல்படி செலவு களை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே. பலரும் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். நம்முடைய வரவு-செலவு குறித்து நமக்கு தெளிவான திட்டம் வேண்டும். கணவன்-மனைவி இருவரும் சம்பாதிப்பவர்களாக இருந்தால், இருவரது ஊதியம் மற்றும் குடும்பத்திற்கு வேறு வகைகளில் வரும் வருமானத்திலிருந்து அவசரச் செலவுகள், உடனடித் தேவைக்கு உரிய செலவுகள், எதிர்காலத் திட்டத்திற்குரிய செலவுகள், கல்வி, மருத்துவச் செலவுகள் போன்றவற்றுக்குப் பணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மீதிப் பணத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

 

 

 

சிலர் சம்பளத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பிற சொத்துக்களின் மூலம் வரும் வருமானத்தை எந்தத் திட்டமும் இல்லாமல் செலவு செய்கிறார்கள். இது மகா தவறு. சம்பளம் தவிர வரும் வருமானம் அனைத்துமே கணக்கில் கொண்டு வந்தால்தான் எதிர்காலத்திற்கான சேமிப்பை அதிகப்படுத்த முடியும்.

சேமிப்பு!

எவ்வளவு பெரிய நெருக்கடியாக இருந்தாலும் சேமிக்கும் பழக்கத்தைக் கைவிடக்கூடாது. பத்து வருடத் துக்கு முன்பு செய்யப்பட்ட சேமிப்பு மற்றும் முதலீடுகள் இன்று பெருந்தொகையாக வளர்ந்து நிற்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதனால் ஒவ்வொரு மாதமும் சேமிப்புக்கான தொகையை ஒதுக்கிவிட வேண்டும். இது அவசர காலத்துக்கு மட்டு மல்ல, எதிர்கால பணவீக்க விகிதத் தில் உங்களது செலவுகளை சமாளிப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.

ஒரு மாதத்தில் 10% பணத்தைக் குறைந்தபட்சமாக ஒருவர் சேமிக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் சராசரி சேமிப்பு 20 சதவிகிதத்திற்கு மேல் என்பதால் அந்த அளவுக்கு சேமிப்பதை நம் லட்சியமாக வைத்துக் கொள்ளலாம்.

வாகனப் பயன்பாடு!

சராசரியாக இரண்டு மாதங் களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதை சமாளிக்க நமது சொந்த வாகனங்களை தேவைகேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடந்து போய் வரக்கூடிய தூரத்தில் இருக்கும் கடைகளுக்குச் செல்ல வண்டியை எடுத்து செல்லக் கூடாது. வேலைக்குச் சென்று வருவது தவிர சின்னச் சின்ன வேலைகளை சைக்கிள் வைத்தே செய்து முடிக்கலாம்.

உங்கள் பகுதியிலிருந்து வேலை க்கு வரும் நண்பரோடு சேர்ந்து இருவராக அலுவலகம் சென்று வரலாம். அலுவலக பேருந்து வசதியை பயன்படுத்தலாம். அல்லது பொதுப் போக்குவரத்துக்கு பழகிக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரு மாதத்தில் 150 ரூபாய் முதல் 400 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.

 

 

அவுட்டிங்!

அடிக்கடி ஓட்டல்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். கணவன், மனைவி, இரு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒருமுறை உணவகம் செல்ல வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 500 ரூபாயாவது செலவிட வேண்டியிருக்கும். இதற்குப் பதிலாக வீட்டிலேயே விதவிதமான உணவுகளை தயார் செய்யலாம். பெரிதாக செலவு செய்யத் தேவை இல்லாத பீச், பார்க் போன்ற இடங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருவது செலவைக் குறைக்கும் சிறந்த வழி. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 300 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.

 

 

கடன்கள்!

நமது வருமானத்தை மீறி எந்த சந்தர்ப்பத்திலும் செலவழிக்கக் கூடாது. இப்படி மேலதிகமாக செலவழிக்கும் போதுதான் கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகிறது. இதனால் வட்டி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் கடனே கூடாது என்பதே சரியான முடிவு. கடன் வாங்கும்போது நாளைய வருமானத்தை இன்றே செலவு செய்கிறோம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத கடனை வாங்காமல் இருப்பதன் மூலம் ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

 

 

செல்போன்!

 

செல்போன் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒருவரைத் தொடர்பு கொள்ளும்முன் அவரோடு என்ன பேச வேண்டும் என்று யோசித்து போன் செய்ய வேண்டும்.  பண்டிகை நாட்களில் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களுக்கு வழக்கத்தைவிடவும் அதிக கட்டணம் வசூல் செய்யப் படுவதால் அன்றைக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதைத் தவிர்க்கலாம். ரீசார்ஜ் செய்வதற்கு அவ்வப்போது கிடைக்கும் சலுகைகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். செல்போன் நிறுவனங்கள் வெகுவிரைவில் கட்டணங்களை உயர்த்தப் போவதாகப் பேச்சு இருப்ப தால் இதற்கு இப்போதே பழகிக் கொள்ளவும். செல்போனை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மாதத்திற்கு 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை மிச்சப் படுத்தலாம்.

கிரெடிட் கார்டு!

அவசரத்துக்கென கிரெடிட் கார்டை பயன்படுத்த தொடங்கி இப்போது எதற்கெடுத்தாலும் கிரெடிட் கார்டு நீட்டுவது வசதியான விஷயமாக மாறிவிட்டது. முக்கியமாக, கிரெடிட் கார்டை வைத்துக் கொண்டு பெரிய பெரிய மால்களுக்குள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால், நம்மை அறியாமலே நம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருளை வாங்கிவிடுவோம். எக்காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டு மூலம் பணத்தை எடுக்கவே கூடாது. கிரெடிட் கார்டின் மூலம் அநாவசியமாக செலவாவதைத் தடுப்பது எப்படி?

கடந்த ஒரு வருடத்தில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, அதற்காக எவ்வளவு வட்டி கட்டியிருக்கிறீர்கள் என்று சின்னதாக ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள். எப்படி குறைத்துப் போட்டாலும் 300 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை வட்டியாக கட்டியிருப்பீர்கள் என்பது புரியும். கிரெடிட் கார்டை உங்கள் கன்ட்ரோலில் வைத் திருந்தால் மாதத்திற்கு 300 ரூபாயை நீங்கள் எளிதாகச் சேமிக்கலாம்.

 

 


வீட்டு பட்ஜெட்!

வீட்டிற்குத் தேவையான பலசரக்கு பொருட்களை சில்லறையாக வாங்காமல் மொத்தமாக வாங்கும்போது விலை குறைவாகக் கிடைக்கும். வீட்டுக்கெதிரே கடை இருந்தும், மொத்த காய்கறி அங்காடிகள் உங்கள் வீட்டுக்கு அருகே இருந்தால் அங்கேயே சென்று வாங்கலாம். ஒரு பொருளை எவ்வளவு பயன்படுகிறதோ, அதற்குமேல் வாங்காமல் இருப்பதே நல்லது.

ஒரு வேளைக்கு எவ்வளவு தேவையோ, அதை மட்டுமே சமைப்பதன் மூலம் உணவுப் பொருட்கள் தேவை இல்லாமல் வீணாவதை தடுக்கலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குக் குறைந்தது 200 முதல் 400 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.

மின்சாரம்!

மின்சாரத் தட்டுப்பாடு பெரிய அளவில் இருக்கும் இந்த வேளையில், பணம் செலவானாலும் பரவாயில்லை என இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்றவற்றை வாங்கி, வாழ்க்கையை அனுபவிப்பது அவசியமா என்று பார்க்க வேண்டும். குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் மின் விளக்குகளை பயன்படுத்தலாம்.

எல்லா நேரத்திலும் ஏசியை ஓட விடாமல், மின்விசிறியை பயன்படுத்தலாம். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீரும் வீணாகாது. மோட்டாருக்கு மின்சாரம் விரயம் ஆவதும் குறையும். இதன் மூலம் மாதத்திற்கு குறைந்தது 50 ரூபாய் முதல் 300 வரை மிச்சப்படுத்தலாம்.

பகுதி நேர வேலை!

திட்டமிட்டு செலவைக் குறைப்பதோடு, நம் வருமானத்தை அதிகரிக்கவும் முயற்சி செய்யலாம். அந்தந்த பகுதிகளில் அதற்குரிய வாய்ப்பு கள் என்ன என்பதை யோசித்து குறைந்தபட்சம் ஒரு நாளில் இரண்டு மணி நேரமாவது ஒதுக்கி, அதற்கு பாடுபட்டால் உங்கள் வருமானம் நிச்சயம் அதிகரிக்கும். அது சொற்பமாக இருந்தாலும் உங்கள் செலவைச் சமாளிக்கவும், எதிர்காலத்திற்குச் சேமிக்கவும் உதவும்” என்று முடித்தார் முத்துகிருஷ்ணன்.

செலவுகளை சமாளிக்கும் சூப்பர் டிப்ஸ்களை சொல்லி விட்டார் நிபுணர். இனி அதை நடைமுறைப்படுத்த வேண்டியது உங்கள் வேலை!

 

 

Credit : The vikatan