தமிழகம் புதுவை பிளஸ்டூ ரிசல்ட் வெளியீடு


 

தேர்வு முடிவுகளை காண இங்கு அழுத்தவும்

 

 

ப்ளஸ்-2 தேர்வு முடிவு சற்று முன் வெளியிடப்பட்டது.நாமக்கல் மாணவி 1189 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

நாமக்கல் கண்டம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.வி. பள்ளி மாணவியான இவர் இயற்பியல்,வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய  4 பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று இந்த சாதனையை  புரிந்துள்ளார்.

 

அவருக்கு அடுத்தபடியாக 1188 மதிப்பெண்களை பெற்று அதே நாமக்கல் பகுதியை சேர்ந்த கார்த்திகா ,அசோக் குமார் ( நாமக்கல் கிரீன்பார்க் மெட்ரிக்குலேசன் பள்ளி ) மற்றும் மணிகண்டன் ( நாமக்கல் விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளி) ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

 

மூன்றாம் இட்த்தை 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்று பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.இதில் மகேஸ்வரி என்ற மாணவி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள வித்ய விகார் மெட்ரிக்குலேசன் பள்ளியை சேர்ந்தவர் ஆவார். பிரபா சங்கரி என்ற மாணவி நாமககல் கண்டம்பாளையத்தை சேர்ந்த எஸ்.கே.வி. பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.

 

முதல் மூன்று இடங்கள் மட்டுமல்லாது,நான்காவது இடத்தையும்  நாமக்கல் பகுதிகளை சேர்ந்தவர்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,.

 

மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி

 

மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 208 பேர் தேர்வு எழுதிய நிலையில்,சராசரி  தேர்ச்சி விகிதம் 86.7 (கடந்த ஆண்டு 85.9) சதவிகிதம் என்றும், இதில் மாணவிகள் 89.7 சதவீதம் ,மாணவர்கள் 83.2 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது தேர்வு எழுதிய 3 லட்சத்து 50 ஆயிரத்து 736 பேர் மாணவர்களில், 2 லட்சத்து 91 ஆயிரத்து 678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

அதேப்போன்று 4 லட்சத்து 5 ஆயிரத்து 728 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில்,3 லட்சத்து 63 ஆயிரத்து,916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

200 க்கு 200 ( அடைப்பு குறிக்குள் முந்தைய ஆண்டு விவரம்) 

 

கணித பாடத்தில் 2,656 பேர் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

 

வேதியியலில் 1444 பேரும் ( 1243 ), இயற்பியலில் 142 ( 646),உயிரியலில் 620 ( 615),தாவரவியலில் 6 (14), விலங்கியலில் 4 (0), கணினி அறிவியலில் 615 (223), வணிகவியலில் 921 (1167),.கணக்கு பதிவியலில் 2518(1320), வணிக கணக்குவியலில் 475(3581) பேரும் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளன.

 

 

முதல் முறையாக நமது கோட்டகுப்பம் இணையத்தளம்

 

தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது

 

தமிழகம் புதுவை பிளஸ்டூ தேர்வு முடிவுகள்

 

இன்று 22/05/2012 வெளியிடப்பட்டன…


Advertisements