+ 2 தேர்வு முடிவு நமது இணையத்தளத்தில்


 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. கோட்டகுப்பம் உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரியில் தேர்வு எழுதிய 8.22 லட்சம் மாணவ, மாணவிகள் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிந்தன. 5,557 பள்ளிகளை சேர்ந்த 8.22 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர் மாணவிகள். தனித்தேர்வர்களாக 61 ஆயிரத்து 319 பேர் தேர்வு எழுதினர்.

 

 

 

நாளை 22/05/2012 வெளியாகவுள்ள +2 தேர்வு முடிவுகளை காண கோட்டகுப்பம் இணையதளத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோளை ஏற்று இந்த ஆண்டு முதல் முக்கிய பரீட்சை முடிவுகளை நாம் நமது தளத்தில் வெளியிட உள்ளோம்.நாளை காலை 11 மணி முதல் +2 தேர்வு முடிவுகளை காண கோட்டகுப்பம் இணையதளம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, உங்கள் ஆதரவோடு…..

Advertisements