வளர்ச்சியை நோக்கி முன்னேறும் புதிய கோட்டகுப்பம்


 


வரலாற்றில் கி .மு மற்றும் கி. பி என்று இரண்டு உள்ளது போல், நமது கோட்டகுப்பத்தை கிழக்கு கடற் கரை சாலை இரண்டாக பிரித்துள்ளது. இனி வரும் காலத்தில் இப்போது இருக்கும் பகுதிகளை பழைய கோட்டகுப்பம் என்றும், மேலும் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பரக்கத் நகர், ஜமியத் நகர் போன்ற பகுதிகளை புதிய கோட்டகுப்பம் என்றும் அழைப்பார்கள். ஏற்கனவே கோட்டகுப்பதை பெரிய கோட்டகுப்பம், சின்ன கோட்டகுப்பம் என்று அழைத்தது போல் இனி வரும் காலத்தில் புதிய கோட்டகுப்பம் என்றும் பழைய கோட்டகுப்பம் என்றும் பல கோட்டகுப்பம்களாக உருவாகும் காலம் வெகுதுரத்தில் இல்லை.

 

சமிபத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் கோட்டகுப்பம் வருங்காலத்தில் எந்தளவுக்கு வளர்ச்சி அடையும் என்று இப்போதே ஆர்வமாக உள்ளது. நமது கோட்டகுப்பம் புதிதாக எத்தனை பகுதிகளாக உருவாகினாலும்,நமது ஊர் ஒரே நிர்வாகத்தின் கிழ் இயங்க எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்க நாம் அனைவரும் பிராத்திப்போம்.

20120520-221001.jpg20120520-221012.jpg

20120520-221007.jpg20120520-221017.jpg

20120520-221023.jpg