தாகம் தணிக்கும் சுவையான நீர் – தொடும் துரத்தில்


கோட்டகுப்பம் என்று சொன்னால் ஒரு காலத்தில் சுவையான குடி நீர் கிடைக்கும் இடம் என்று சொல்லுவார்கள். கடற்கரை ஓரத்தில் இருந்தாலும் 10 அடியில் சுவையான நீர் கிடைத்து வந்தது. இப்போது பல அடிகள் நோண்டினாலும் சுவையான நீர் கிடைப்பது கிடையாது. இதற்கு கோட்டகுப்பதை சுத்தி தண்ணீர் எடுத்து விற்கும் நிறுவனம் அதிகம் வந்ததால், சுவையான நீர் ஒரு கனவாகவே ஆகி விட்டது.

 

கோட்டகுப்பம் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்ட தலைவர், தான் ஜெயித்தால் கோட்டகுப்பம் மக்களுக்கு சுவையான நீர் கிடைக்க படு படுவதாக சொன்னார்கள்.

 

அவர்கள் ஜெயித்து வந்தது முதல் இதற்கான வேலை தொடங்கி விட்டார்கள். கோட்டகுப்பதை அடுத்துள்ள சின்ன கோட்டக்குப்பத்தில் சுவையான நல்ல தண்ணீர் கிடைக்கும் இடத்தில் இருந்து கோட்டகுப்பம் வரை 5 கிலோமிட்டர் அளவுக்கு பைப் லைன் அமைத்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பம்பிங் ஸ்டேஷன் அமைத்து தண்ணீர் சீரான வேகத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்கள். பரக்கத் நகர் வரை இந்த பனி முடிந்து விட்டது, மேலும் இந்த பகுதி வரை சோதனைக்காக தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

 

இன்னும் இரண்டு கிலோ மிட்டர் தூரம் பை அமைத்து விட்டால் கோட்டகுப்பம் பகுதி மக்களுக்கு வெகு விரைவில் சுவையான குடி நீர் கிடைக்கும். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நம் மக்களுகாக உழைக்கும் பேரூராட்சி தலைவர் மற்றும் அவருக்கு அதரவாக இயங்கும் அப்துல் ஹமித் அவர்களுக்கு மக்களின் சார்பில் நன்றி.

Advertisements