பைபாஸ் சாலையில் போக்குவரத்து தப்பியது கோட்டகுப்பம்


20120517-074614.jpg

20120517-074620.jpg

இ.சி.ஆர்., பைபாஸ் சாலையை, வாகன ஓட்டிகள் பயன்படுத்த துவங்கி விட்டதால், கோட்டக்குப்பத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில், பைபாஸ் சாலை அமைக்கப்படாமல் இருந்ததால், அனைத்து வாகனங்களும் புதுச்சேரி நகரத்தின் வழியாக சென்றன. இதனால், நகரத்தில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது.குறிப்பாக, புதுச்சேரியின் எல்லையில் அமைந்துள்ள கோட்டக்குப்பத்தில், 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.


 

இதற்கிடையில், கிழக்கு கடற்கரை சாலையில், கோட்டக்குப்பத்தில் இருந்து கருவடிக்குப்பம் வரை, பைபாஸ் சாலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பணிகள் முழுமையாக முடிவதற்கு முன்பே, பைபாஸ் சாலையை வாகன ஓட்டிகள் முழு வீச்சில் பயன்படுத்த துவங்கி விட்டனர். இதன் எதிரொலியாக, முத்தியால்பேட்டை பகுதி போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி உள்ளது.கோட்டக்குப்பம் காந்தி ரோடு வாகன நடமாட்டம் குறைந்து காட்சியளிக்கிறது. முத்தியால்பேட்டை, கோட்டக்குப்பம் பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

ECR சம்மந்தமான அணைத்து பதிவுகளையும் இதை அழுத்தி பார்க்கலாம்

Advertisements