கோட்டகுப்பம் இணையத்தளம் வளர்ச்சி – ஒரு பார்வை


 

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு விதையாக துவக்கப்பட்ட நமது இணையத்தளம், இன்று ஒரு மரமாக காட்சி அளிக்கிறது. கோட்டக்குப்பத்தில் இருந்து பலர் வெளி ஊர்களிலும், வெளி நாட்டிலும் வேலைக்கு சென்றுள்ளனர், மேலும் பலர் வெளிநாட்டில் குடும்பத்துடன் புலம் பெயர்த்துள்ளனர். கோட்டகுப்பதை விட்டு சென்று விட்டால் இங்கு நடக்கும் எதுவும் அவர்களுக்கு விரைவில் தெரிய வருவது இல்லை, சிலர் தங்கள் நண்பர்களுக்கு தொலைபேசியில் பேசும் பொது தான் ஊரில் நடக்கும் விஷயங்கள் தெரிய வரும். இல்லை என்றால் அவர்கள் மறு முறை கோட்டகுப்பம் வந்தால் தான் இங்கு நடப்பது தெரியும்.

இப்படி பட்ட நேரத்தில் தொடங்கப்பட்டது தான் இந்த இணையத்தளம். பத்தாண்டுகளுக்கு முன்பு கூகுள் தேடும் கருவியில் “கோட்டகுப்பம்” என்று தேடினால் அதிகபட்சம் 60 பரிந்துரை தான் வரும், அது கூட போலீஸ் ஸ்டேஷன், போஸ்ட் ஆபீஸ், பேங்க் என்று தகவல் தான் இருக்கும். நமதுரை சேர்ந்த வேறு செய்திகள் கிடைக்காது. நாம் கோட்டகுப்பம். webs .com என்று ஆரம்பித்த நாள் முதல் “கோட்டகுப்பம்” என்ற பெயர் குகிளில் நமது மக்களால் அதிகம் தேடும் பெயராக உருவெடுத்தது. வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு ஒரு வரபிரசாதமாக இது அமைந்தது. சில மாதம் பின்னர் கோட்டகுப்பம்.tk என்று பெயர் மாற்றம் செயப்பட்டது, அந்த நாள் முதல் கூகுள் சர்ச் என்ஜின் சூடுபிடிக்க ஆரம்பித்தது. நாம் தொடர்ந்து இந்த தளத்தில் முக்கிய செய்திகளை கொடுத்து கொண்டு இருந்தோம். சில வருடம் கழித்து நாம் விரும்பும் வசதிகள் அதில் கிடைக்க வில்லை, மேலும் மக்களுக்கு நாம் வீடியோ எடுத்து காண்பிக்கும் வசதி அப்போது அதில் கிடையாது. மக்களுக்கு அதிக செய்தி கொடுக்க நினைத்த நமக்கு, இந்த இடையுறுகள் சலிப்பை ஏற்படுத்தியது.

பின்னர் நமக்கு வரபிரசாதமாக கிடைத்தது தான் இப்போது நாம் பார்க்கும் இந்த wordpress .com இணையத்தளம். இதையே இன்னும் சுறுக்கி http://www.kottakuppam.in என்று பொது பெயராக கொடுத்தோம். நாம் விரும்பும் அணைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் கொடுத்து கொண்டு இருக்கும் இது தான் கோட்டகுப்பம் இணையத்தளம் வரலாற்றை திருப்பி எழுதியது. இன்று கூகுளில் “கோட்டகுப்பம்” என்று எழுதினால் குறைந்தபட்சம் 2 லட்சம் மேற்பட்ட பரிந்துரைகளை காண முடியும் அதில் முதன்மையானது தெரிவது நமது இணையத்தளம் தான். எல்லாம் புகழும் இறைவனுக்கே.

இதன் வெற்றிக்கு பின்னர் பலரும், தங்கள் இயக்கங்கள் பெயரில் இணையத்தளம் தொடங்க ஆரம்பித்தனர். அதன் முலம் பலதரப்பட்ட செய்திகள் மக்களுக்கு சென்றடைந்து. இன்று கோட்டக்குப்பத்தில் பல இணையத்தளம் இருப்பதும், அதற்கு முன்னோடியாக நாம் இருந்ததும் இன்றும் முன்னணியில் நாம் இருப்பதும் இறைவன் கிருபையாலும், மக்களின் அமோக வரவேற்பாலும் தான் என்று நங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஆரம்பத்தில் கோட்டகுப்பதை சேர்ந்தவர்களால் மட்டும் பார்க்க பட்ட நமது இணையத்தளம் இன்று பல தரப்பட்ட மக்களால் பார்க்க படுவதும் பாராட்ட படுவதும் அவர்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் தான் சாட்சி. அதன் காரணமாக தான் நாமும் நமது ஊர் செய்தி தவிர மற்ற மக்களுக்கும் பயனுள்ள செய்திகளையும் வழங்கி வருகிறோம்.

சமுக அறிவு களஞ்சியமான விக்கிபிடியாவில் நமது இணையதளத்தின் இருந்து கோட்டகுப்பம் சம்மந்தமான தகவல்கள எடுத்து பதிந்துள்ளர்கள்.

நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டும் இயங்கும் நமது இணையம், இன்றைய வளர்ச்சியின் முன்னோடியான iphone , ipad லும் நமது இணையம் பார்க்கும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது. மேலும் facebook , twitter போன்ற அணைத்து வசதிகளும் இதில் இணைத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் வரும்காலத்தில் வர இருக்கும் அணைத்து தொழில் நுட்பமும் நமது இணையத்தில் இணைத்து செயல்படுவோம்.

Advertisements