கோட்டக்குப்பத்தில் அணு சக்திக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!


24/03/2012 அன்று  மாலை 5.00 மணிக்கு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அணுசக்திக்கு எதிரான ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் மற்றும் சமுக அமைப்புகள் ஒன்றினைந்து கடந்த மாதம் “அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்” கோட்டக்குப்பத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு பிரசுரம், சுவருட்டி மூலம் கோட்டகுப்பம் பகுதியில் மக்களுக்கு அணு உலை ஆபத்து குறித்து விழிப்புணர்வை எற்படுத்தி வருகிறது.

 

 

இடிந்தகரையில் அணு உலை விவகாரம் தீவிரம்அடைந்ததை தொடர்ந்து, நேற்று கோட்டக்குப்பத்தில்அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,மண்டல ஒருங்கிணைப்பாளர் கா.தமிழ்வேங்கை, பெரியார் திராவிட கழகம், புதுச்சேர்ரி தலைவர்லோகு ஐய்யப்பன்மு.யா.முஸ்தாக்தீன்(த.மு.மு.க), A.M.இஸ்மாயில்[CPI (ML) ], மா.சுரேஷ்குமார்(விடுதலை சிறுத்தை கட்சி), J.அபூபக்கர் அஜ்மல் (மனிதநேய மக்கள் கட்சி), A.லியாகத் அலி (சமுக சேவகர்) மற்றும் பலர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த கண்டன ஆர்பாட்டத்தை கோட்டக்குப்பம் “அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்” ஒருங்கிணைப்பாளர் முஹைதீன் ஹர்ஷத் தலைமை தாங்கினார்.

கோட்டக்குப்பத்தில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் ஒன்றினைந்த கட்சி மற்றும் அமைப்புகள் :

 

 

  1. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்

  2. விடுதலை சிறுத்தை கட்சி

  3. மனிதநேய மக்கள் கட்சி

  4. இந்திய கம்யூனிஸ்ட் (மார்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி

  5. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

  6. இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

  7. Nice – Guys Association மற்றும்

  8. சமூக ஆர்வளர்கள்…
    நன்றி தகவல் : ரியாஸ் அஹமத் 


Advertisements