இருட்டில் வாழ்க்கை………!


கோட்டக்குப்பத்தில் மின் வாரியம் அறிவித்த நேரத்துக்கு மேல்  மின் வெட்டு உள்ளது.எண்ணை தீர்ந்து போன விளக்கு போல் எப்பொழுது போகும் என்பதே இன்றைய மின்சாரத்தின் நிலை. அறிவிக்கப்பட்ட மின்தடையில் பழகிவிட்ட நமக்கு இன்று கண்ணை சிமிட்டும் மின்சாரம் எல்லாவேளைகளிலும் நம்மை நிர்க்கதியாக்கிவிட்டது.  மக்கள் இருட்டில் குருடர்களாக வாழ பழகி கொண்டார்கள். இந்த இருட்டால் ஒரு நன்மை நமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சொந்த பந்தம்  வந்தால் மனம் திறந்து பேசுகிறார்கள், இதுவே மின்சாரம் இருந்தால் தொலைகாட்சி சீரியலில் தான் முழு நட்டமும் இருக்கும், ஏன்டா இந்த நேரத்தில் இவர்கள் வந்தார்கள் என்று கூட நினைப்பார்கள். மேலும் விளக்கு வெளிச்சத்தில் குரான் ஓதுவதில் செலவிடுகிறார்கள்.

தற்போதைய ஆட்சியாளர் முன்பு தேர்தல் பிரசாரத்தில் மின்தட்டுப்பாடு போர்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று கூறியதின் பொருள் நமக்கு இப்போதுதான் விளங்கியது.         ( நாம் கொஞ்சம் எதிலுமே லேட் தான்). போர்காலத்தில் மின்சாரத்தை நிறுத்தி விடுவார்கள். ஏனென்றால் குண்டு போட விமானத்தில் வந்தால் நகரங்கள் மின்வேளிச்சத்தில் விமானிக்கு தெரியாமல் இருப்பதற்காக. அதனால்தான் போர்கால அடிப்படையில் மின்தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்று கூறப்பட்டதோ ?

பேய் இருட்டில் கோட்டகுப்பத்தின் அன்றாட வாழ்க்கை உங்கள் வெப் தொலைகாட்சியில்……

Vodpod videos no longer available.

இருட்டில் மாணவர்களின் அவல நிலை 

Advertisements