அகில இந்திய வேலை நிறுத்த பிரசார கூட்டம்


கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி பிரசார கூட்டம் நேற்று நடந்தது.

 

 

அகில இந்திய விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அகில இந்திய தொழிலாளர் சங்க மைய கவுன்சில் பொது செயலாளர் மோதிலால், சிபிஜ எம்எல் வானூர் ஒன்றிய அமைப்பாளர் இஸ்மாயில் ஆகியோர் விளக்க உரையாற்றினர். இதில் கோட்டக்குப்பம் பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 8500 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்காமல், 4010 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளது. 8500 குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். கோட்டக்குப்பத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.

Advertisements