இருளில் முழுகிய கோட்டகுப்பம் !


 

கோட்டகுப்பம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால், மின்சார சாபம் நமதுரையும் சூழ்ந்து உள்ளது. தற்போதைய நிலையில் கோட்டக்குப்பத்தில் அரசு சார்பில் 6முதல் 8 மணி நேரம் மின் தடை என்று அறிவிக்காமல் மறைமுகமாக அமுல்படுத்தி உள்ளார்கள் . ஆனால் உண்மையில் 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் கிடையாது. இதில் மின்வாரிய ஊழியர்கள் புத்திசாலி தனமாக தினம் ஒரு நேரத்தில் மின்சாரம் நிறுத்தி  வருகிறார்கள்.

கோட்டகுப்பத்தின் இன்று மின்சாரம் நிறுத்திய நேரம் :

 

கலை 6 .00 முதல் 7 .30 வரை

 

கலை 8 .30 முதல் 11 .00 வரை

 

மதியம் 1 .00 முதல் 3 .00 வரை

 

மலை 6 .30 முதல் 7 .30 வரை

 

இரவு 11 .00 முதல் 1 .00 வரை

 

 

 

நாளை இந்த நேரத்தில் மற்றம் இருக்கும் . மேல குறிப்பிட்டு உள்ளது போல்  9 மணி நேரம் வரை நிறுத்தி உள்ளார்கள். இது இன்னும் சில மணி நேரம் கூடும் ஆனால் குறையாது. கோட்டகுப்பம் ஒரு நடுத்தர ஊர் என்பதால் இங்கு அதிகமான தொழில் சாலை கிடையாது.

 

நமதூரில் உள்ள வெல்டிங் மற்றும் மரம் அறுக்கும் கடைகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு இப்போது வேலை சுத்தமாக கிடையாது, மேலும் இவர்களை நம்பி யாரும் புதிய வேலை கொடுப்பது கிடையாது, அதை அருகில் இருக்கும் பாண்டியில் கொடுத்து விடுகிறார்கள். ஆரோவில் கோட்டகுப்பதை சார்ந்த ஊர், அங்கு நிறைய தொழில் சாலைகள் உள்ளது, அவர்களின் நிலை ரொம்ப பரிதாபம்.

 

தற்போதைய ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் புதிய பெரிய ஜெனரடோர் வாங்கியதால் தொழுகை நடக்கும் நேரத்தில் மட்டும் தான் பேன் கற்று வாங்குகிறார்கள். ஆண்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு நமது பெண்களுக்கு கிடையாது. விட்டில் உள்ளவர்கள் நிலை மோசம். வசதி குறைவானவர்கள் எந்த நேரமும் இருட்டில் தங்கள் நேரத்தை மெழுகு வத்தி வெளிச்சத்தில் போக்குகிறார்கள். வசதி உள்ளவர்கள் பாட்டரி மற்றும் இன்வெட்டர்களை  வைத்து கொஞ்சம் அறுதல் அடைகிறார்கள், மின்வெட்டை சரிக்கட்ட பயன்படுத்தப்படும் இன்வெட்டர்களை கூட சார்ஜ் செய்ய முடியாத நிலைக்கு மின்தடை தொடர்வதால் இன்வெட்டர்களையும் முறையாக பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

சுமார் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.30 ஆயிரம் வரை கொடுத்து வாங்கியாவது மின்வெட்டை சமாளித்துக் கொள்ளலாம் என்று நம்பி வாங்கியவர்கள் தற்போது மின்வெட்டால் இன்வெட்டர்களை சார்ஜ் கூட செய்ய முடியாத சூழ்நிலையில் பெரும் கவலை அடைந்துள்ளனர்.அது கூட இப்போது பாதி சார்ஜ் ஏறும் முன்னரே மின்சாரம் போவதால், அதற்கும் வழி இல்லாமல் உள்ளது.

 

இந்த நிலைக்கு என்ன  தான் தீர்வு தொடர்ந்து வரும்  கட்டுரையை படியுங்கள் 

Advertisements