முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கோரி போராட்டம்


முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் சார்பாக 14-2-2012  அன்று முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

 1402201211633(10)

 நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் முஸ்லிம்கள் உள்ளனர். 100-க்கு 35 சதவீதம் முஸ்லிம்கள் கூலித் தொழிலாளியாகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ்நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.

 Picture 033

எனவே ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவும், தமிழகத்தில் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்தவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது.

 

 இதில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம், உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, கூனிமேடு, களமருதூர், எ.கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் கனிசமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஐ.சாகுல் தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் பி.எம். இப்ராஹிம் பிர்தெüஸி தொக்க உரையாற்றினார். மாநில பேச்சாளர் இ. பாரூக் கண்டன உரையாற்றினார். கே.எம். மொய்தீன் நன்றி கூறினார்.

Advertisements