புதுவையில் பால் விலை உயர்வு


புதுவையில் நாளைமுதல் பால் விலை லிட்டர் ஒன்றிற்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக,

புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

 

 

அதன்படி, பதப்படுத்தப்பட்ட, கொழுப்பு நீக்கப்பட்ட பாலின் விலை லிட்டருக்கு 21 ரூபாயிலிருந்து 26 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பாலின் விலை, 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

இந்த உயர்வு நாளை முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட நீல நிற பாக்கெட் 200 மிலி பாலின் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து ஐந்து ரூபாயாகவும், அரை லிட்டர் பாலின் விலை 10 ரூபாய் 50 காசுகளிலிருந்து 13ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரை லிட்டர் பசும்பாலின் விலை 13 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisements