கோட்டக்குப்பம் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள்


கோட்டக்குப்பத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

பேரூராட்சி தலைவர் ரபியத்துல் பசிரியா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் வச்சலா வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி முன்னிலை வகித்தார், வானூர் ஒன்றிய சேர்மன் சிவா கலந்து கொண்டு, 71 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.

முன்னாள் பேரூராட்சி தலைவர் அமீது, மாவட்ட கவுன்சிலர் சக்கரபாணி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் அய்யப்பன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

Advertisements