தனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்… என்று மாறும் பொது தொகுதி ?


தனி தொகுதி உருவாக்கிய  நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்…

என்று மாறும் பொது தொகுதி ?

 

 

சங்கரன்கோவில் தொகுதியை பொது தொகுதியாக மாற்றும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தனித் தொகுதிகள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால், நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதிகள் தொடர்ந்து 40 வருடங்களுக்கும் மேலாக தனித்தொகுதியாகவே இருந்து வருகின்றன.

 

சங்கரன்கோவில் தொகுதியில் இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்பு இரட்டை உறுப்பினர் தொகுதியாகவும், இதனை தொடர்ந்து ஒரே முறை பொது தொகுதியாக இருந்தபோது மஜீத் இங்கு வெற்றி பெற்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

 

சங்கரன்கோவில் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு நகராட்சி, 3 யூனியன், ஒரு பேரூராட்சி ஆகியவற்றின் தலைவர் பதவியும், 72 பஞ்சாயத்து தலைவர் பதவியும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையிலும், சட்டமன்ற தொகுதியை மட்டும் இதுவரையில் பொது தொகுதியாக மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது இத்தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

சங்கரன்கோவில் அருகில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகள் கூட சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சங்கரன்கோவில் மட்டும் தொடர்ந்து தனித் தொகுதியாக நீடிக்கிறது. இந்நிலையில் சங்கரன்கோவில் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்கும் வரையில் தேர்தலை புறக்கணிப்பு செய்யப்போவதாக முக்குலத்தோர் ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளது.

 

 

மேல் இருக்கும் செய்திய பார்த்தவுடன் நமக்கு சூர் என்று கோபம் வரும், நமது வானூர் தொகுதி 40 ஆண்டுகளுக்கு மேல் தனி தொகுதியாக இருந்து வருகிறது, ஆனால் மற்ற ஊர்களில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மாற்றி வருகிறார்கள், சங்கரன் கோவில் கூட 40 ஆண்டுகளுக்கு முன் பொது தொகுதியாக இருந்தது,

 

ஆனால் நமது வானூர் தொகுதி தமிழ்நாடு என்று உருவாக்கி தனி தொகுதி என்று வந்த நாள் முதல் இது தனி தொகுதியாக தான் உள்ளது. தமிழக அரசு நமக்கு என்று நிவாரணம் தர போகிறார்கள், நமது ஊர் அரசியல் வாதிகள் மற்றும் சமுக சேவை இயக்கங்கள் இதற்கு என்று எப்போது போராட போகிறார்கள். நாமும் மற்றவர்களை போல விழித்து கொள்ளும் நாள் என்றோ………………

 

Advertisements